இன்று நாம் மதிய உணவு உடன் வைத்து சாப்பிட ஆந்திரா ஸ்டைல் சுவையான கடப்பா கத்திரிக்காய் பொரியல் பற்றிய தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நம் வீடுகளில் மதிய உணவு உடன் ஏதாவது கூட்டு பொரியல் மற்றும் அவியல் என ஏதாவது ஒன்று இருந்தால் தான் மதிய உணவே சரிவர சாப்பிடுவோம். ஆனால் குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை சரியாக சாப்பிடக்கூட மாட்டார்கள் ஆனால் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த கத்திரிக்காய் பொரியலை ஒரே மாதிரி நீங்கள் செய்து கொடுப்பதற்கு பதிலாக.
இதையும் படியங்கள் : சுவையான கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி ?
இது போன்று இந்த கடப்பா கத்திரிக்காய் பொரியலை செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அட்டகாசமான சுவையில் இருக்கும் சாப்பாட்டையும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் முழுமையாக சாப்பிட்டு முடிப்பார்கள். அதனால் இன்று இந்த கடப்பா கத்திரிக்காய் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கடப்பா கத்தரிக்காய் பொரியல் | Kadapa Brinjal Poriyal Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
மிக்ஸியில் அரைக்க
- 5 பச்சை மிளகாய்
- 2 சில் தேங்காய் நறுக்கியது
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
பொரியல் செய்ய
- 6 கத்தரிக்காய் நறுக்கியது
- 2 tbsp புளி தண்ணீர்
- அவிப்பதற்கு தண்ணீர் தேவையான அளவு
- 3 tbsp எண்ணெய்
- 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
- 1 tbsp சீரகம்
- 1 tbsp கடலை பருப்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- அரைத்த தேங்காய்
- 1 கப் துவரம் பருப்பு வேக வைக்க
- உப்பு தேவையான அளவு
- கொத்த மல்லி சிறிது
செய்முறை
- முதலில் நாம் எடுத்துக் கொண்ட கத்திரிக்காய்களை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு நீளவாக்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடைய அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி
- நாம் நறுக்கிய கத்திரிக்காய் மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு புளி தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், நறுக்கிய தேங்காய் துண்டுகள், இஞ்சி மற்றும் பூண்டு போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் கடுகு உளுந்தம் பருப்பு மற்றும் சீரகம் சேர்க்கவும் பின் கடுகு பொரிந்து வந்தவுடன் கடலைப்பருப்பு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து கிளறி விடவும்.
- பின் இதனுடன் நாம் வேகவைத்த கத்திரிக்காய் துண்டுகளை தண்ணீர் வடித்து சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கி பின் இதனுடன் ஒரு கப் வேக வைத்த துவரம் பருப்பு மற்றும் மிக்ஸியில் அரைத்த தேங்காய் சேர்த்து கிளறி விட்டு வதக்கி கொள்ளுங்கள்.
- பின் நடுவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கடாயை மூடி வைத்து வேக வைத்து கொள்ளுங்கள் பின்பு கடைசியாக சிறிது கொத்தமல்லியை தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான கடப்பா கத்திரிக்காய் பொரியல் தயார்.