- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் சாப்பிடுவதற்கு ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரை குறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு
இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற கடப்பா கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி ?
பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த குடைமிளகாய் பொரியல் செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் பிடிக்கும். நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். ஆகையால் இன்று இந்த குடைமிளகாய் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் நாம் வைத்திருக்கும் குடைமிளகாயின் உட்பகுதியை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு மூன்று டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்
பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு, உளுந்த பருப்பு சேர்த்து தாளிக்கவும், பின் கடுகு நன்கு பொரிந்தவுடன்.
நாம் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்ததும். இதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீ ஸ்பூன் மிளகாய்தூள் மற்றும் அரை டீஸ்பூன் மல்லிதூள் சேர்த்து கிளறவும்.
பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் நாம் நறக்கி வைத்திருக்கும் குடமிளகாய் மற்றும் தேயைான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கடாயை மூடி வைத்து வதக்கி விடுங்கள்.
பின் குடைமிளகாய் முக்கால்வாசி நன்கு வதங்கி வந்ததும் நாம் பொடித்து வைத்திருக்கும் பொட்டு கடலைப் பொடியை சேர்த்து கிளறி விட்டு இரண்டு நிமிடம் வதக்கி கடாயை இறக்கவும். அவ்வளவுதான் சவையான குடைமிளகாய் பொராயல் தயார்.






