மதிய உணவுக்கு ருசியான குதிரைவாலி குஸ்கா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிஞ்சாது!

குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளை குஸ்கா நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். ஆனால் சற்று வழக்கத்துக்கு மாறாக நாம் பயன்படுத்தும் அர

By Prem Kumar · 26/11/2023

குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளை குஸ்கா நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். ஆனால் சற்று வழக்கத்துக்கு மாறாக நாம் பயன்படுத்தும் அரிசிக்கு பதில் இன்று குதிரைவாலியை நாம் பயன்படுத்தப்போகிறோம். இதற்காக காசு செலவு பண்ணி பாசுமதி அரிசி வாங்க வேண்டாம். சீரகசம்பா அரிசி வாங்க வேண்டாம். சிம்பிளான இந்த குதிரைவாலி அரிசி குஸ்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. சிறுதானிய வகையைச் சேர்ந்த குதிரைவாலி உடலுக்கு மிகவும் நல்லது. அதிக நீர் தேவைப்படாத வானம் பார்த்த பூமியைச் சேர்ந்த புன்செய் பயிராகும். இந்த குதிரைவாலி உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது, இந்த அற்புதமான குதிரைவாலி அரிசியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.

மேலும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இவற்றில் அதிகமாகவே உள்ளன. அதோடு கோதுமையைவிட குதிரைவாலியில் ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியில் சாதம் செய்து சாப்பிட்டு வந்தால் அவை அண்டாது. இப்படி எண்ணற்ற நற்பயன்களை உள்ளடக்கியுள்ள குதிரைவாலி அரிசியில் குஸ்கா தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான கத்திரிக்காய் மசாலா இப்படி செய்து பாருங்க! பிரியாணிக்கு மட்டும் இல்ல சாதம்,டிபன் என அனைத்திற்கும் இது தான் பெஸ்ட் சைடிஷ்!

Recipes AMP · Quick view
View full