Home ஸ்வீட்ஸ் லட்டு சாப்டனும்னா இனிமேல் கடைக்கு போய் வாங்கி சாப்பிடாம வீட்டிலயே சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

லட்டு சாப்டனும்னா இனிமேல் கடைக்கு போய் வாங்கி சாப்பிடாம வீட்டிலயே சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு ஸ்வீட்னா அது லட்டு அப்படின்னு சொல்லலாம். எல்லாருக்குமே ரொம்ப பிடிச்ச இந்த லட்டு சாப்பிடனும்னா பேக்கரியில் தான் போய் நம்ம வாங்குவோம் ஆனா இனிமேல் உங்களுக்கு லட்டு சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா நீங்க பேக்கரிக்கு போய் வாங்கணும் அப்படின்ற அவசியமே கிடையாது வீட்டிலேயே ரொம்பவும் குறைவான பொருட்கள் நம்ம வீட்டுல இருக்குற பொருட்களை வைத்து லட்டு செய்யலாம்.

-விளம்பரம்-

அந்த லட்டு ரொம்ப ஆரோக்கியமான முறையில நம்ம வீட்லையே செய்றதால குழந்தைகளுக்கும் கூட நம்ம பயப்படாம கொடுக்கலாம். உங்களுக்கு தேவையான அளவுல சர்க்கரை சேர்த்து பிடித்த மாதிரி என்னென்ன டிரை ஃப்ரூட்ஸ் சேர்க்கணுமோ அதெல்லாம் சேர்த்து செஞ்சு சாப்பிடுங்க. ரொம்பவே டேஸ்டா இருக்கும் இதுல ஏலக்காய் சேர்க்கிறதால அதோட வாசனை இன்னும் ரெண்டு லட்டு சாப்பிடணும் அப்படின்னு நமக்கு தோணும் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் நிறைய ஸ்வீட் ரெசிப்பிஸ் இருந்தாலும் லட்டுனா போதும் நிறைய பேரு விரும்பி சாப்பிடுவாங்க.

வீட்ல விசேஷங்கள் பண்டிகைகள்னு வந்தா நம்ம அக்கம் பக்கத்துல இருக்குறவங்களுக்கும் வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கும் இந்த சுவையான லட்டுவை செஞ்சு கொடுத்து அசத்தலாம். இப்ப வாங்க இந்த சுவையான லட்டு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

லட்டு | Laddu Recipe In Tamil

லட்டு ரொம்ப ஆரோக்கியமான முறையில நம்ம வீட்லையே செய்றதால குழந்தைகளுக்கும் கூட நம்ம பயப்படாம கொடுக்கலாம். உங்களுக்கு தேவையான அளவுல சர்க்கரை சேர்த்து பிடித்த மாதிரி என்னென்ன டிரை ஃப்ரூட்ஸ் சேர்க்கணுமோ அதெல்லாம் சேர்த்து செஞ்சு சாப்பிடுங்க. ரொம்பவே டேஸ்டா இருக்கும் இதுல ஏலக்காய் சேர்க்கிறதால அதோட வாசனை இன்னும் ரெண்டு லட்டு சாப்பிடணும் அப்படின்னு நமக்கு தோணும் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் நிறைய ஸ்வீட் ரெசிப்பிஸ் இருந்தாலும் லட்டுனா போதும் நிறைய பேரு விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: laddu
Yield: 4
Calories: 198kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலை மாவு
  • 1/4 டீஸ்பூன் உப்பு
  • 3/4 கப் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் கேசரி பவுடர்
  • 2 ஏலக்காய்
  • 15 முந்திரி
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் கடலை மாவு, உப்பு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்
  • தண்ணீராக கரைத்து வைத்த கடலை மாவை வீட்டில் உள்ள வடிகட்டியில் ஊற்றி சூடான எண்ணெயில் போட்டு ஐந்து நிமிடங்கள் அதனை வேக வைத்து எடுக்கவும்
  • பிறகு அதனையும் ஆற வைத்து மிக்ஸிஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் சர்க்கரை கேசரி பவுடர் சேர்த்து அதில் ஏலக்காய் களையும் தட்டி சேர்த்து ஒரு கம்பி பதம் வந்த பிறகு அரைத்து வைத்துள்ள கடலை மாவை தூளை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
  • ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமான பிறகு தயார் செய்து வைத்துள்ள கடாயில் சேர்த்து தேவையான அளவிற்கு உருண்டைகளாக பிடித்து எடுத்தால் சுவையான லட்டு தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 198kcal | Carbohydrates: 269g | Protein: 7g | Fat: 1g | Sodium: 128mg | Potassium: 97mg | Fiber: 1g