- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற ஸ்வீட்டாக இருக்காது. ஆனால் இன்று நாம் பார்க்க போகும் ஸ்வீட் சிறுதானியம் வைத்து செய்யப்படுவதால் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற ஒரு ஸ்வீட் ஆக இருக்கும். அல்வா என்று சொன்னால் யாருக்கு தான் நாக்கில் எச்சில் ஊறாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்புகளில் ஒன்று அல்வா. ஆனால் இதை சில உடல்நல பிரச்சனைகளால் சிலர் ஒதுக்கி விடுவார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு.
ஆம் இந்த பதிவில் சத்தான தினை வைத்து எவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த அல்வா செய்வது என்று தான் நாம் பார்க்க இருக்கிறோம். தினை அரிசி ஒரு புன்செய் பயிராகும். இந்த அற்புதமான தினை அரிசியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இவற்றில் அதிகமாகவே உள்ளன. அதோடு கோதுமையை விட தினையில் ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. இப்படி எண்ணற்ற நற்பயன்களை உள்ளடக்கியுள்ள தினை அரிசியில் அல்வா எப்படி தயார் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான மற்றும் ஆரோக்கியமான தினை பாலக் புலாவ் வெறும் 20 நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் சுவையான லஞ்ச் தயார்!!!
Ingredients
Method
முதலில் ஒரு காடாயை அடுப்பில் வைத்து திணை அரிசியை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்தது மாவாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கருப்பட்டியை மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, பாதாம் சேர்த்து வறுத்து கொள்ளவும். பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள திணை மாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி பாகை சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறவும். பின் சிறிது நேரம் கழித்து அதனுடன் நாட்டு சர்க்கரை, உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
பின் சிறிதளவு நெய் சேர்த்து அல்வா நன்கு திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தினை அல்வா தயார்.






