வெண்டைக்காய் பால்கறி இப்படி செஞ்சு பாருங்க, ஒரு குன்டான் சாதம் இருந்தாலும் பத்தாது!           

- Advertisement -

பொதுவாக வெண்டைக்காயை வறுவல், சாம்பார் செய்வது வழக்கம். எப்போதும் சேர்க்கப்படும் புளிக்கு பதிலாக இப்படி தேங்காய் பால் சேர்த்து சேர்த்தும் வெண்டைக்காய் பால்கறி  செய்து அசத்தலாம். வெண்டைக்காய் கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி, தோசைக்கு கூட தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த வெண்டைக்காய் பால்கறி திருநெல்வேலியில் விசேஷமாக செய்வது உண்டு. இந்த ஸ்பெஷல் வெண்டைக்காய் பால்கறி  நாமும் எப்படி வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

-விளம்பரம்-

எல்லோருக்கும் வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடித்தமான ஒரு காய்கறி வகையாக இருக்கும். ஆனால் அதை சரியாக சமைக்கா விட்டால் அதன் பிசுபிசுப்பு தன்மை அதனை வெறுக்க வைத்து விடும். ஆனால் வெண்டைக்காய் பால்கறி இப்படி ஒரு முறை செய்து கொடுத்தால், இனி அடிக்கடி இதைத்தான் வீட்டில் இருப்பவர்கள் கேட்பார்கள். அந்த அளவிற்கு சுவையை தரும் இந்த வெண்டைக்காய் பால்கறி நாமும் எப்படி செய்வது? என்பதை கற்றுக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -
Print
3 from 2 votes

வெண்டைக்காய் பால்கறி | Ladies Finger Paal Curry In Tamil

தேங்காய் பால் சேர்த்து சேர்த்தும் வெண்டைக்காய் பால்கறி  செய்து அசத்தலாம்.சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி, தோசைக்கு கூடதொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.எல்லோருக்கும் வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடித்தமானஒரு காய்கறி வகையாக இருக்கும். ஆனால் அதை சரியாக சமைக்கா விட்டால் அதன் பிசுபிசுப்புதன்மை அதனை வெறுக்க வைத்து விடும். ஆனால் வெண்டைக்காய் பால்கறி இப்படி ஒரு முறை செய்துகொடுத்தால், இனி அடிக்கடி இதைத்தான் வீட்டில் இருப்பவர்கள் கேட்பார்கள்.
Prep Time4 minutes
Active Time10 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Ladies finger Paal Curry
Yield: 3
Calories: 192kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 150 கிராம் வெண்டைக்காய்
  • 1/2 மூடி தேங்காய்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை சிறிது
  • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • முதலில் வெண்டைக்காயைகழுவி வைக்கவும். ( தண்ணீருடன் நறுக்கினால் வழ வழ கொழ கொழ வென வரும் ). ஆகையால் காயிலுள்ளதண்ணீர் காய்ந்த பின் நறுக்கிகொள்ளவும். லேசாக ( 5 நிமிடம்) வெண்டைக்காயை வதக்கி வைக்கவும்,
  • தேங்காயை துருவி அதை முதலில் பிழிந்து கட்டியாக முதல் பால் எடுத்துக்கொள்ளவும் பின்பு அந்த தேங்காய்துருவலை மிக்சியில் அரைத்து ( பிழிந்து ) இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளவும். மறுபடியும்அத்துருவலில் தண்ணீர் தெளித்து பிழிந்து எடுக்கவும் மூன்றாம் பால்.
  • வெங்காயம்,தக்காளியை நறுக்கி, பின் பச்சைமிளகாயை நடுவில் கீரிகொண்டு மேலே குறிப்பிட்ட தேவையானபொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக்கொள்ளவும்,
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும் பொரிந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும், பின்தக்காளி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,
  • வதங்கிய பின்புவெண்டைக்காயை சேர்க்கவும், அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துபிரட்டிவிடவும் தேங்காய் பாலில் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாலையும் அதனுடன் ஊற்றிஉப்பு சரிபார்த்து மூடிவிடவும்,
     
  • நன்றாக கொதித்த பின்பு தனியாக வைத்திருக்கும் தேங்காய்முதல் பாலை அதனுடன் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு இறக்கிவிடவும்.
  • சுவையான வெண்டைக்காய்பால்கறி ரெடி.

Nutrition

Serving: 300g | Calories: 192kcal | Carbohydrates: 8g | Protein: 19g | Cholesterol: 3mg | Potassium: 378mg | Iron: 3mg