ருசியான வெண்டைக்காய் சுண்டல் கிரேவி இப்படி செய்து பாருங்க சாதம் மற்றும் சப்பாத்திக்கு பக்காவான ரெசிபி!

சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைத்தால் போதும் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உடலுக

By Prem Kumar · 8/2/2024

சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைத்தால் போதும் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருளில் வெண்டைக்காயும் ஒன்று. இந்த வெண்டைக்காயை வைத்து புளி குழம்பு, சாம்பார், பொரியல் இந்த மூன்றை மட்டும் தான் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் செய்வோம். அப்படி இல்லையென்றால் மோர் குழம்பு வைப்போம். இது அல்லாமல் புதுவிதமான ஸ்டைலில், வித்தியாசமான ஒரு கிரேவியை நம் வீட்டிலேயே எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வெண்டைக்காய் பிடிக்காதவங்க யாருமே இல்ல. விதவிதமா ருசிச்சு சாப்பிடணும்னு நினைக்கிறவங்க வட இந்திய ஸ்பெஷல்ல வெண்டைக்காய் சுண்டல் கிரேவி செய்தால் இனி எப்பவுமே இதுதான்னு சப்பு கொட்டி சாப்பிடுவீங்க. இந்த கிரேவியை எளிதாக வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக செய்து விடலாம். இவற்றை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும். வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். இதை சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த கிரேவியை சப்பாத்தி, தோசை, பூரி இவைகளுக்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சுட சுட சாப்பாட்டில் பிசைந்தும் சாப்பிடலாம்.

இதனையும் படியுங்கள் : பாட்டி சொன்ன சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

Recipes AMP · Quick view
View full