ருசியான வெண்டைக்காய் சுண்டல் கிரேவி இப்படி செய்து பாருங்க சாதம் மற்றும் சப்பாத்திக்கு பக்காவான ரெசிபி!

- Advertisement -

சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைத்தால் போதும் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருளில் வெண்டைக்காயும் ஒன்று. இந்த வெண்டைக்காயை வைத்து புளி குழம்பு, சாம்பார், பொரியல் இந்த மூன்றை மட்டும் தான் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் செய்வோம். அப்படி இல்லையென்றால் மோர் குழம்பு வைப்போம். இது அல்லாமல் புதுவிதமான ஸ்டைலில், வித்தியாசமான ஒரு கிரேவியை நம் வீட்டிலேயே எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

-விளம்பரம்-

வெண்டைக்காய் பிடிக்காதவங்க யாருமே இல்ல. விதவிதமா ருசிச்சு சாப்பிடணும்னு நினைக்கிறவங்க வட இந்திய ஸ்பெஷல்ல வெண்டைக்காய் சுண்டல் கிரேவி செய்தால் இனி எப்பவுமே இதுதான்னு சப்பு கொட்டி சாப்பிடுவீங்க. இந்த கிரேவியை எளிதாக வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக செய்து விடலாம். இவற்றை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும். வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். இதை சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த கிரேவியை சப்பாத்தி, தோசை, பூரி இவைகளுக்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சுட சுட சாப்பாட்டில் பிசைந்தும் சாப்பிடலாம்.

- Advertisement -
Print
No ratings yet

வெண்டைக்காய் சுண்டல் கிரேவி | Ladys Finger Chana Gravy Recipe In Tamil

சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைத்தால் போதும் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருளில் வெண்டைக்காயும் ஒன்று. இந்த வெண்டைக்காயை வைத்து புளி குழம்பு, சாம்பார், பொரியல் இந்த மூன்றை மட்டும் தான் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் செய்வோம். அப்படி இல்லையென்றால் மோர் குழம்பு வைப்போம். இது அல்லாமல் புதுவிதமான ஸ்டைலில், வித்தியாசமான ஒரு கிரேவியை நம் வீட்டிலேயே எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Ladys Finger Chana Gravy
Yield: 4 People
Calories: 33kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி வெண்டைக்காய்
  • 1 கப் வேகவைத்த சுண்டல்
  • 4 பெரிய வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 துண்டு வெல்லம்

அரைக்க :

  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 10 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி

செய்முறை

  • முதலில் வெண்டைக்காயை கழுவி ஒரு துணியில் துடைத்து விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வெண்டைக்காய் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் வேகவைத்த சுண்டல் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதித்ததும் வெண்டைக்காய் சேர்த்து அதனுடன் வெல்லம் மற்றும் பெருங்காயத்தூள், கொத்தமல்லி தழை சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெண்டைக்காய் சுண்டல் கிரேவி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 33kcal | Carbohydrates: 7.5g | Protein: 9.1g | Fat: 1.2g | Sodium: 4.53mg | Potassium: 303mg | Fiber: 2.52g | Vitamin A: 7IU | Vitamin C: 9.1mg | Calcium: 46.2mg | Iron: 2.24mg

இதனையும் படியுங்கள் : பாட்டி சொன்ன சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!