Advertisement
சட்னி

இட்லி தோசைக்கு ஏற்ற எலுமிச்சை பழ சட்னி செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் காலை அல்லது இரவு உணவாக நான் செய்யும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகை உணவுகளுக்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற எலுமிச்சை பழ சட்னி பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக நாம் வீடுகளில் இட்லி தோசை செய்யும் பொழுது அதனுடன் வைத்து சாப்பிட அதிகபட்சமாக நாம் செய்யும் சட்னியை தேங்காய் சட்னி தக்காளி சட்னி தான். இந்த இரு சட்னிகளை மட்டுமே ஒரு சுழற்சி முறையில் மாற்றி மாற்றி வைத்து சாப்பிடுவோம்.

இதையும் படியுங்கள் : சுவையான கிராமத்து பச்சை பயறு சட்னி செய்வது எப்படி ?

Advertisement

ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டால். அப்போது நீங்கள் கண்டிப்பாக இந்த எலுமிச்சை பழ சட்னியை செய்து பாருங்கள் இது போன்ற நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த எலுமிச்சை பழ சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

எலுமிச்சை பழம் சட்னி | Lemon Chutney Recipe in Tamil

Print Recipe
பொதுவாக நாம் வீடுகளில் இட்லி தோசை செய்யும் பொழுது அதனுடன் வைத்து சாப்பிட அதிகபட்சமாக நாம் செய்யும் சட்னியை தேங்காய் சட்னி தக்காளி சட்னி தான். இந்த இரு சட்னிகளை மட்டுமே ஒரு சுழற்சி முறையில் மாற்றி மாற்றி வைத்து சாப்பிடுவோம். ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டால். அப்போது நீங்கள் கண்டிப்பாக இந்த எலுமிச்சை பழ சட்னியை செய்து பாருங்கள் இது போன்ற நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, rajasthan
Keyword lemon, எலுமிச்சை பழம்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 128

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

சட்னி செய்ய

  • 2 tbsp எண்ணெய்
  • ¼ tsp வெந்தயம்
  • 2 tsp உளுந்த பருப்பு
  • 1 tsp கடலை பருப்பு
  • 12 வர மிளகாய்
  • 3 எலுமிச்சை பழம்

தாளிக்க

  • 1 tbsp எண்ணெய்
  • ½ tsp கடுகு
  • ½ tsp உளுந்த பருப்பு
  • ½ tsp கடலை பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்
  • 5 பல் நசுக்கிய பூண்டு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ¼ tsp பெருங்காய தூள்

Instructions

  • முதலில் ஒரு
    Advertisement
    கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கால் டீஸ்பூன் வெந்தயம், இரண்டு டீஸ்பூன் உளுந்த பருப்பு, ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து நான்கு வறுத்து கொள்ளுங்கள்.
  • பின் இதனுடன் 12 வர மிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். வர மிளகாய் நன்கு வறுபட்டதும் கடாயை கீழ் இறக்கி வறுத்த பொருட்களை நன்கு குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின் குளிர வைத்த பொருள்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மூன்று எலுமிச்சை பழம் சாறு விதைகள் இல்லாமல் சேர்த்து பின் பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இதில் தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது.
  • பின் அரைத்த சட்னியை ஒரு பவுளில் தனியாக எடுத்து கொண்டு. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுக உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
  • பின் கடுகு பொரிந்தவுடனா கடலை பருப்பு, வர மிளகாய், நசுக்கிய பூண்டு, கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து தாளித்து சட்னியுடன் கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான எலுமிச்சை பழ சட்னி தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 200gram | Calories: 128kcal | Protein: 13g | Saturated Fat: 1g | Cholesterol: 2mg | Sodium: 6mg | Potassium: 807mg | Fiber: 1g | Sugar: 0.7g
Advertisement
Prem Kumar

Recent Posts

மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

33 நிமிடங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

48 நிமிடங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

2 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

6 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

6 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

6 மணி நேரங்கள் ago