- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
நாம் வீட்டில் காலை உணவாக அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை வைத்து மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பச்சை பயறு சட்னியை செய்து பாருங்கள்.
இதையும் படியுங்கள் : புதுவிதமான இந்த தேங்காய் சட்னி செய்து எப்படி ?
கண்டிப்பாக இந்த பச்சை பயறு சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக இது மாறி போகும். ஆகையால் இன்று இந்த சுவையான பச்சை பயறு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.
English Overview: pachai payaru chutney is one of the most important dishes in india. pachai payaru chutney recipe or pachai payaru chutney seivathu eppadi or pachai payaru chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.
Ingredients
Method
முதலில் நாம் எடுத்துக் கொண்ட பச்சைப்பயிறை ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஓரு இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் சீரகம் இரண்டு வரமிளகாய் சேர்த்து வறுக்கவும். அதன் பின்பு இதனுடன் நம் தோலுரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அனைத்து பொருட்களும் நன்கு வதங்கிய பின்பு கடாயை கீழே இறங்கி குளிர வையுங்கள்.
அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வதக்கிய பொருட்களை சேர்த்து அதனுடன் ஊற வைத்த பச்சைப்பயறு, ஒரு துண்டு புளி, இரண்டு பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, பெருய்காய துாள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து, இந்த தாளிப்பையும் சட்னியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான பச்சை பயிறு சட்னி தயார்.






