உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு நீங்க இந்த வழிபாடு செய்யுங்கள் ?

- Advertisement -

நம் வாழ்க்கையில் எல்லோருக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரி பிரச்சினைகள் இருப்பதில்லை அப்போது அவை பல்வேறு காரணத்தால் மாறுபடலாம். அவ்வப்போது நான் சந்திக்கும் பிரச்சனைகள் மாறுபடும் அப்பொழுது நாம் அதற்கேற்றாற்போல் கடவுள்களை வணங்குவதன் மூலம் நாம் அந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். அந்த வகையில் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் இருக்கிறார்கள் இந்த பஞ்ச குண சிவமூர்த்திகள். சிவனின் ஐந்து குணங்களையும் உணர்த்துபவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இந்த பஞ்ச குண சிவ மூர்த்திகள் சிவனின் அவதாரமாவார்கள். இந்த சிவ குண மூர்த்திகள் பற்றியும், அவர்களின் குணாதிசயங்கள் பற்றியும், எந்தெந்த பிரச்சனைக்கு யார் யாரை வழிபட்டால் அந்த பிரச்சனைகள் நீங்கும் என்பதனை பற்றியும் இதனில் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பஞ்ச குணங்கள் என்று கூறப்படுபவை ஆனந்தம், சாந்தம், கருணை, வசீகரம் மற்றும் ருத்ரம் ஆகும்.

- Advertisement -

ஆனந்தத்தை தரும் நடராஜ வழிபாடு:

முதலில் நாம் பார்க்க இருப்பது ஆனந்த மூர்த்தியாக திகழக்கூடிய நடராஜர். இவரை நாம் தொடர்ந்து வணங்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் எல்லாம் நீங்கி ஆனந்தங்கள் பல பெருகும். அவர் எவ்வாறு ஆனந்த நடனம் புரிந்தாரோ அதே போல் நம் வாழ்க்கையும் ஆனந்தத்தில் திளைக்கும்.

சாந்தத்தை தரும் தட்சிணாமூர்த்தி வழிபாடு:

அடுத்தாக சாந்தம். சாந்த மூர்த்தியாக திகழக்கூடியவர் தட்சிணாமூர்த்தி. இவரை நாம் தென்முக கடவுள் என்றும், குரு பகவான் என்றும் கூறுவோம். இவர் எப்பொழுதும் ஆழ்ந்த தியானத்தில் இருக்கக்கூடியவர். நம் வாழ்க்கையில் நமக்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்றாலும், நாம் சாந்தமாக இருக்க வேண்டும் என்றாலும் இந்த சாந்த மூர்த்தியான தக்ஷிணாமூர்த்தியை வணங்கி வரலாம்.

குடும்ப ஒற்றுமையை தரும் சோமாஸ்கந்தர் வழிபாடு

அடுத்தபடியாக கருணையே வடிவாய் கருணாகர மூர்த்தியாக திகழக்கூடியவர் சோமாஸ்கந்தர். இவர் குடும்ப சமேதமாய் உமையாளுடனும், மகனான முருகனுடனும் சேர்ந்து காட்சி தருகிறார், இவரை நாம் வணங்கி வந்தால் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். மேலும் இவரை நாம் வேண்டினால் வேண்டிய வரம் அனைத்தையும் நமக்கு வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

வசிகரத்தை தரும் பிட்சாடனர் வழிபாடு

நான்காவதாக வசீகர மூர்த்தியாக திகழக்கூடியவர் பிட்சாடனார். இவர் தன் கையில் திருவோட்டை ஏந்தி பிச்சை எடுத்த வண்ணம் காட்சியளிக்கிறார். இருப்பினும் இவரிடம் இருக்கக்கூடிய வசீகரத் தன்மையால், இவரை வசீகர மூர்த்தி என்று கூறுகிறார்கள். மேலும் இவரை வணங்குவதன் மூலம் அவரிடம் இருக்கும் அந்த ஈர்ப்பு சக்தியானது நமக்கு அதிகரித்து, நம்மையும் ஒரு வசீகரத் தன்மைக்கு ஆட்படுத்துகிறது.

தீவினை தீர்க்கும் பைரவர் வழிபாடு

ஐந்தாவதாக ருத்ரமூர்த்தி அவர் உக்கிரமூர்த்தி என்றும் அகோர மூர்த்தி என்றும் அழைக்கப்படுபவர் அவரே பைரவர் ஆவார். தீவினைகள் அனைத்தையும் அகற்றுவதில் வல்லவராக திகழ்கிறார் பைரவர். பைரவரை நாம் வணங்கிவந்தால் அவர் நமக்கு ஏற்படக்கூடிய எண்ணிலடங்கா பிரச்சனைகளில் இருந்தும், தீமைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றி நல்வழிப்படுத்துவார். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தில் இருந்து தப்பித்து வெளியே வருவதற்கும், வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு பெருந்துணையாக இருப்பவர் கால பைரவரே.

இவ்வளவு அற்புதமான குணாதிசயங்களை தனக்கென கொண்ட சிவபெருமானிடம், நமக்கு எந்த குணம் முக்கியமாக வேண்டும் என்று நாம் கருதுகிறோமோ அந்த குணத்திற்குரிய சிவ மூர்த்தியை வழிபட்டு, அந்த குணத்தை நாமும் அடைந்து வாழ்வில் வெற்றி பெறுவோமாக. ஓம் நமசிவாய.

-விளம்பரம்-