Home சைவம் எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் வைத்து போர் அடித்து விட்டதா அப்படியானால் இந்த வித்தியாசமான மா...

எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் வைத்து போர் அடித்து விட்டதா அப்படியானால் இந்த வித்தியாசமான மா வத்தல் சாம்பாரை ட்ரை செய்து பாருங்கள்!!!

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். அதிகப்படியான புரதச்சத்து நிறைந்துள்ள இந்த சாம்பாரை வெறும் மா வத்தல் சேர்த்து சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பலருக்கு மாங்காயைப் பார்த்தாலே வாயில் இருந்து எச்சில் ஊறும். அத்தகைய மாங்காயை காய வைத்து அதிலிருந்து வரும் வத்தல் கொண்டு சாம்பார் செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறும் இருக்கும். நீங்கள் வைக்கும் சாம்பார் எப்போதும் சுவையாக இருக்காதா? எப்போது சாம்பார் செய்தாலும் ருசி இல்லாமல் இருக்குமா? நீங்கள் சாம்பார் செய்கிறேன் என்றாலே வீட்டில் உள்ளோர் பயப்படுவார்களா? அப்படியானால் அடுத்தமுறை சாம்பார் செய்யும் போது இந்த மாதிரி செய்யுங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளவாறு மாங்காய் வத்தல் கொண்டு சாம்பார் வைக்கும் போது ருசி இன்னும் அற்புதமாக இருக்கும்.

மேலும் எப்போதும் சாம்பார் வைக்கும் போது ஒரே ஒரு காய்கறியை மட்டும் பயன்படுத்தாமல், இந்த மாதிரி செய்யும் போது சுவை இன்னும் நன்றாக இருக்கும். எப்போதும் கேரட், முருங்கை, என்று அதே காய்கறிகளை வைத்து சாம்பார் செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இதற்கு உருளைக்கிழங்கு பொரியல் அல்லது பச்சை பட்டாணி மசாலா வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Print
No ratings yet

மா வத்தல் சாம்பார் | Ma Vathal Sambar Recipe In Tamil

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். அதிகப்படியான புரதச்சத்து நிறைந்துள்ள இந்த சாம்பாரை வெறும் மா வத்தல் சேர்த்து சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பலருக்கு மாங்காயைப் பார்த்தாலே வாயில் இருந்து எச்சில் ஊறும். அத்தகைய மாங்காயை காய வைத்து அதிலிருந்து வரும் வத்தல் கொண்டு சாம்பார் செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறும் இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Ma Vathal Sambar
Yield: 4 People
Calories: 166kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் மா வத்தல்
  • புளி நெல்லிக்காய் அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 2 தக்காளி
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

அரைக்க :

  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 8 வர மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்

செய்முறை

  • முதலில் மா வத்தலை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் துவரம் பருப்பை நன்கு அலசி விட்டு குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு, மல்லி விதை, வர மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  • பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின் சின்ன வெங்காயம், தக்காளி, மா வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் புளி கரைசல் சேர்த்து பத்து நிமிடங்கள் மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • பின் அரைத்த விழுது மற்றும் துவரம் பருப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் வித்தியாசமான மா வத்தல் சாம்பார் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 166kcal | Carbohydrates: 8.3g | Protein: 8.2g | Fat: 5g | Sodium: 330mg | Potassium: 160mg | Fiber: 7.3g | Vitamin A: 65IU | Vitamin C: 172mg | Calcium: 8mg | Iron: 20mg

இதனையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சாம்பார் இப்படி செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!!!