வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில் உள்ளவர்களின் அன்பினை எளிதில் பெற்று விடலாம். வீட்டில் உள்ளவர்கள் புதுசா, டிஃபரென்டா ஏதாவது செய்து தரும்படி சொல்லுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். பரோட்டா பொதுவாகவே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. பரோட்டா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். தென்னிந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. பரோட்டாக்களில் பல வகை உண்டு. அதில் மதுரை கொத்து பரோட்டா, பன பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, மற்றும் சிலோன் பரோட்டா மிகவும் பிரபலமானவை. இதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மலாய் பரோட்டா.
தமிழ்நாட்டில் பிரியாணிக்கும், பரோட்டாவிற்கும் போட்டி வைத்தால் அடித்து சொல்லலாம் பரோட்டா தான் ஜெயிக்கும் என்று. அவ்வளவு பரோட்டா பிரியர்கள் இருக்கிறார்கள் நம்ம ஊரில். சூடான பரோட்டாவை பிய்த்து, அதன் மேல் சால்னா ஊற்றி, அப்படியே சாப்பிட்டால் ஆஹா! அதன் சுவையை வார்த்தைகளால் கூற முடியாது. சுவைத்து சாப்பிட்டால் தான் அதன் சுவையை உணர முடியும். பரோட்டா என்பது அனைவருக்கும் பிடிக்கும் அதேபோல் நீங்கள் மலாய் பரோட்டா சாப்பிட்டு இருக்கீர்களா? அது எப்படி அவ்வளவு சுவையாக இருக்கும். அதனை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்று பார்க்க போகிறோம். பொதுவாக பரோட்டா செய்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் அதனாலே அதை வீட்டில் செய்ய யாரும் விரும்பவே மாட்டார்கள். இனி கவலை வேண்டாம் வீட்டில் சுலபமான முறையில் எப்படி மலாய் பரோட்டா செய்வது என்பதை பார்க்கலாம்.
மலாய் பரோட்டா | Malai Parotta Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1/4 கி மைதா மாவு
- 1/2 கப் காய்ச்சிய பால்
- உப்பு தேவையான அளவு
- 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
- 4 டேபிள் ஸ்பூன் நெய்
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் மைதா மாவுடன் உப்பு, சர்க்கரை, பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்து மாவுடன் சிறிதளவு எண்ணெய் ஊற்றி 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி இதையும் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின் சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து நன்கு பெரிதாக விரித்துக் கொள்ளவும்.
- பின் தேய்த்த மாவின் மீது சிறிது எண்ணெய் விட்டு பரோட்டாவிற்கு வட்டமாகவோ அல்லது சதுரமாகவோ மடித்து மீண்டும் தேய்க்க வேண்டும்.
- பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மலாய் பரோட்டா தயார். இதை சிக்கன் க்ரேவி அல்லது சைவ சால்னா சேர்த்து சாப்பிட்ட மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : பரோட்டாவுக்கு ஏற்ற ருசியான சிக்கன் சால்னா ஒருமுறை இப்படி ஒரு முறை செய்து அசத்துங்கள்!