பரோட்டா அப்படிங்கிற உணவே நம்ம வாழ்க்கையில ஒண்ணா ஒன்றி போய்டுச்சு. பரோட்டா இல்லாம நிறைய பேர் சாப்பிடுவதே கிடையாது ஹோட்டல்களுக்கு போனால். அந்த அளவுக்கு நம்ம எல்லாருக்கும் பரோட்டாவில் அப்படி ஒரு ஈடுபாடு வந்துருச்சு. இந்த பரோட்டாவில் ஈடுபாடு வருவதற்கு முக்கியமான காரணம் அந்த பரோட்டா மேல ஊத்தி சாப்பிட சால்னா தான் அப்படின்னு சொல்லலாம்.
பரோட்டாவுக்கு ஏத்த மாதிரி சைவ சால்னா அசைவ சால்னா நிறைய குருமாக்களையும் சால்னாக்களையும் இந்த பரோட்டாவுக்கு கொண்டு வந்துட்டாங்க. அந்த மாதிரி ரோட்டு கடைகளில் கிடைக்கிற மாதிரியான சிக்கன் சால்னா பரோட்டாவுக்கு எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இப்படி சுவையான ரோட்டு கடைகளில் கிடைக்கிற மாதிரியான சிக்கன் சால்னாவுக்கு நிறைய பேரு அடிமையாகவே இருப்பார்கள் என்று சொல்லலாம்.
அவங்க சாப்பிடற பரோட்டா ரெண்டே ரெண்டா இருக்கும் ஆனால் அவங்க எடுத்துக்கிற சால்னாவோட அளவு அதிகமாக இருக்கும். அந்த மாதிரி சில பேருக்கு சிக்கன் சால்னா மேல இருக்கிற ஒரு ஆசை ஆர்வம் அப்டிங்குறது ரொம்பவே அதிகமா இருக்கும். வெறும் சால்னாவுக்காகவே பரோட்டா சாப்பிடறதுக்கு வர்றவங்களும் இருக்காங்க அப்படிப்பட்டவர்களுக்காக ஹோட்டல்ல போய் டெய்லி சாப்பிட முடியாது இல்லையா அதுக்காக நம்ம வீட்ல சுவையா அதே மாதிரி சிக்கன் சால்னா எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
பரோட்டா சிக்கன் சால்னா | Parotta Chicken Salna In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- சிக்கன்
- வெங்காயம்
- தக்காளி
- மஞ்சள் தூள்
- மிளகாய்தூள்
- மல்லிதூள்
- புதினா
- பட்டை
- கிராம்பு
- ஏலக்காய்
- பிரியாணி இலை