Advertisement
சைவம்

இரவு டிபனுக்கு அட்டாகாசமான ருசியில் மலாய் பரோட்டா இப்படி ட்ரை பண்ணி பாருங்க விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில் உள்ளவர்களின் அன்பினை எளிதில் பெற்று விடலாம். வீட்டில் உள்ளவர்கள் புதுசா, டிஃபரென்டா ஏதாவது செய்து தரும்படி சொல்லுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். பரோட்டா பொதுவாகவே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. பரோட்டா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். தென்னிந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. பரோட்டாக்களில் பல வகை உண்டு. அதில் மதுரை கொத்து பரோட்டா, பன பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, மற்றும் சிலோன் பரோட்டா மிகவும் பிரபலமானவை. இதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மலாய் பரோட்டா.

தமிழ்நாட்டில் பிரியாணிக்கும், பரோட்டாவிற்கும் போட்டி வைத்தால் அடித்து சொல்லலாம் பரோட்டா தான் ஜெயிக்கும் என்று. அவ்வளவு பரோட்டா பிரியர்கள் இருக்கிறார்கள் நம்ம ஊரில். சூடான பரோட்டாவை பிய்த்து, அதன் மேல் சால்னா ஊற்றி, அப்படியே சாப்பிட்டால் ஆஹா! அதன் சுவையை வார்த்தைகளால் கூற முடியாது. சுவைத்து சாப்பிட்டால் தான் அதன் சுவையை உணர முடியும். பரோட்டா என்பது அனைவருக்கும் பிடிக்கும் அதேபோல் நீங்கள் மலாய் பரோட்டா சாப்பிட்டு இருக்கீர்களா? அது எப்படி அவ்வளவு சுவையாக இருக்கும். அதனை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்று பார்க்க போகிறோம். பொதுவாக பரோட்டா செய்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் அதனாலே அதை வீட்டில் செய்ய யாரும் விரும்பவே மாட்டார்கள். இனி கவலை வேண்டாம் வீட்டில் சுலபமான முறையில் எப்படி மலாய் பரோட்டா செய்வது என்பதை பார்க்கலாம்.

Advertisement

மலாய் பரோட்டா | Malai Parotta Recipe In Tamil‌

Print Recipe
வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில் உள்ளவர்களின் அன்பினை எளிதில் பெற்று விடலாம். வீட்டில் உள்ளவர்கள் புதுசா, டிஃபரென்டா ஏதாவது செய்து தரும்படி சொல்லுபவர்களுக்கு இந்த பதிவு
Advertisement
உதவியாக இருக்கும். பரோட்டா பொதுவாகவே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. பரோட்டா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். தென்னிந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. பரோட்டாக்களில் பல வகை உண்டு. அதில் மதுரை கொத்து பரோட்டா, பன பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, மற்றும் சிலோன் பரோட்டா மிகவும் பிரபலமானவை. இதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மலாய் பரோட்டா.
Advertisement
Course dinner
Cuisine Indian
Keyword Malai Parotta
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 3 People
Calories 345

Equipment

  • 1 பவுள்
  • 1 தோசை கல்

Ingredients

  • 1/4 கி மைதா மாவு
  • 1/2 கப் காய்ச்சிய பால்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 4 டேபிள் ஸ்பூன் நெய்                            
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் மைதா மாவுடன் உப்பு, சர்க்கரை, பால்‌ சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்து மாவுடன் சிறிதளவு எண்ணெய் ஊற்றி 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி இதையும் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து நன்கு பெரிதாக விரித்துக் கொள்ளவும்.
  • பின் தேய்த்த மாவின் மீது சிறிது எண்ணெய் விட்டு பரோட்டாவிற்கு வட்டமாகவோ அல்லது சதுரமாகவோ மடித்து மீண்டும் ‌தேய்க்க வேண்டும்.
  • பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மலாய் பரோட்டா தயார். இதை சிக்கன் க்ரேவி அல்லது சைவ சால்னா சேர்த்து சாப்பிட்ட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 345kcal | Carbohydrates: 73.8g | Protein: 9.8g | Fat: 2.85g | Saturated Fat: 1.15g | Sugar: 1.12g | Calcium: 20mg | Iron: 1.07mg

இதனையும் படியுங்கள் : பரோட்டாவுக்கு ஏற்ற ருசியான சிக்கன் சால்னா ஒருமுறை இப்படி ஒரு முறை செய்து அசத்துங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

13 நிமிடங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

53 நிமிடங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

3 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

4 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

6 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

7 மணி நேரங்கள் ago