Advertisement
அசைவம்

காரசாரமான மங்களூர் முட்டை கிரேவி இப்படி செய்து பாருங்க! பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!

Advertisement

நாம் இன்று மதிய உணவாக சுட சுட சாதத்துடன் வைத்து சாப்பிடுவதற்கும் மற்றும் காலை, இரவு போன்ற நேரங்களில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகை உணவுகளுக்கும் உடன் வைத்து சாப்பிடும் அளவிற்கு சுவையான மங்களூர் முட்டை கிரேவி பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த பெங்களூர் முட்டை கிரேவியை நாம் எளிதாகவும் வேகமாகவும் செய்து விடலாம் இது போல் நீங்கள் உங்கள் வீட்டில்

உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த முட்டை கிரேவி அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் அடுத்த முறையும் இது போல செய்து தர சொல்லி வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த மங்களூர் முட்டை கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Advertisement

மங்களூர் முட்டை கிரேவி | Mangalore Egg Gravy Recipe in Tamil

Print Recipe
சுவையான மங்களூர் முட்டை கிரேவி பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த பெங்களூர் முட்டை கிரேவியை நாம் எளிதாகவும் வேகமாகவும் செய்து விடலாம் இது போல் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த முட்டை கிரேவி அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் அடுத்த முறையும் இது போல செய்து தர சொல்லி வற்புறுத்துவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword egg gravy, முட்டை கிரேவி
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 73

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

மசாலா அரைக்க

  • 2 tbsp எண்ணெய்
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 tsp மிளகு
  • 1 tbsp மல்லி
  • ½ tsp சீரகம்
  • 10 பல் பூண்டு
  • 6 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கொத்து கொத்தமல்லி
  • ½ மூடி தேங்காய் துண்டுகள் பொடியாக நறுக்கியது
  • ¼  tsp மஞ்சள் துாள்

கிரேவி செய்ய

  • 1 tbsp எண்ணெய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • அரைத்த மசாலா
  • 4 முட்டை அவித்தது
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் சிறிது
  • கொத்தமல்லி சிறிது

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் இரண்டு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி, அரை டீஸ்பூன் சீரகம் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.
  • பின் இதனுடன் 10 பல் பூண்டு, ஆறு வர மிளகாய்,
    Advertisement
    ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு கொத்து கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
  • பின் கடைசியாக அரை மூடி பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் மற்றும் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி பின் கடாயை கீழே இறக்கி குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்பொழுது நாம் வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்.
  • அதில் ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து தாளித்து பின் நாம் அரைத்த மசாலா பேஸ்ட்டை தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் கிரேவி நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் நான்கு அவித்த முட்டைகளை பக்கவாட்டு பகுதியில் கீறி விட்டு கிரேவியில் சேர்க்கவும். பின் கிரேவி கெட்டியான பதத்திற்கு வரும் வரை வேக வைத்து. பின் இதனுடன் சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சரியான மங்களூர் முட்டை கிரேவி தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 200gram | Calories: 73kcal | Carbohydrates: 14g | Protein: 21g | Fat: 0.2g | Saturated Fat: 1.2g | Cholesterol: 10mg | Sodium: 2mg | Potassium: 152mg | Fiber: 1g | Sugar: 0.5g | Calcium: 1mg

இதையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான முட்டை 65 செய்வது எப்படி ?

Advertisement
Prem Kumar

Recent Posts

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

5 நிமிடங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

3 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

3 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

5 மணி நேரங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

6 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

8 மணி நேரங்கள் ago