இன்று நாம் முட்டை 65 பற்றிய தான் பார்க்க போகிறோம் மாலை நேரங்களில் டீ காபியுடன் சுட சுட ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு அல்லது மதிய உணவு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இந்த முட்டை 65 செய்து பார்க்கப் போகிறோம். இதுபோன்று ஒரு முறை மாலை நேரங்களில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : KFC ஸ்டைலில் காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி ?
பெரும்பாலான நபர்கள் அவித்த முட்டையை பெரிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த முட்டை 65 செய்து செய்து கொடுத்தால் ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த முட்டை 65 எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சுவையான முட்டை 65 | Egg 65 Recipe in Tamil
Equipment
- 2 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
முட்டை 65
- 6 அவித்த முட்டை பொடியாக நறுக்கியது
- 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
- 5 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
- 3 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 கைப்பிடி கொத்தமல்லி நறுக்கியது
- 1 கைப்பிடி கொத்த மல்லி நறுக்கியது
- ½ tbsp உப்பு
- 1 tbsp மிளகு
- ¼ tbsp மஞ்சள் தூள்
- ½ tbsp மிளகாய் தூள்
- ½ tbsp கரம் மசாலா
- ½ tbsp சீரகம்
- 1 கப் கடலை மாவு
- தண்ணீர் சிறிது
- எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
65 மசாலா வதக்க
- 3 tbsp எண்ணெய்
- 1 பெரிய வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கியது
- 3 பச்சை மிளகாய் கீரியது
- 1 கொத்து கருவேப்பிலை
- 1 tbsp மிளகாய் தூள்
செய்முறை
- முதலில் ஆறு முட்டைகளை அவித்து எடுத்து முட்டை ஒடை நீக்கி சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு முட்டையை பாதியாக வெட்டி உள்ளே இருக்கும் மஞ்சள் கருவை தனியாக எடுத்துவிட்டு பின் வெள்ளை கருவை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
- பின்பு ஒரு பெரிய பவளில் நறுக்கிய முட்டைகளை சேர்த்து அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
- பின் இதனுடன் அரை கப் அளவிற்கு கடலை மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் இதனுடன் மறுபடியும் அரை கப் கடலை மாவு சேர்த்து நன்கு கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு கை என அளவு வைத்து சிறு சிறு உருண்டையாக எடுத்து பின் கடாயில் முட்டையை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
- பின் எண்ணெய் காய்ந்ததும் நீள் வாக்கில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, கீறிய பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் இதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
- என் மிளகாய் தூள் பச்சை வாடை போன பின் நாம் பொரித்த முட்டைகளை இதனோடு சேர்த்து நன்கு கிளறிவிட்டு இதன் இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான முட்டை 65 தயாராகிவிட்டது.