நாம் இன்று மதிய உணவாக சுட சுட சாதத்துடன் வைத்து சாப்பிடுவதற்கும் மற்றும் காலை, இரவு போன்ற நேரங்களில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகை உணவுகளுக்கும் உடன் வைத்து சாப்பிடும் அளவிற்கு சுவையான மங்களூர் முட்டை கிரேவி பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த பெங்களூர் முட்டை கிரேவியை நாம் எளிதாகவும் வேகமாகவும் செய்து விடலாம் இது போல் நீங்கள் உங்கள் வீட்டில்
உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த முட்டை கிரேவி அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் அடுத்த முறையும் இது போல செய்து தர சொல்லி வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த மங்களூர் முட்டை கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மங்களூர் முட்டை கிரேவி | Mangalore Egg Gravy Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
மசாலா அரைக்க
- 2 tbsp எண்ணெய்
- 2 பட்டை
- 2 கிராம்பு
- 1 tsp மிளகு
- 1 tbsp மல்லி
- ½ tsp சீரகம்
- 10 பல் பூண்டு
- 6 வர மிளகாய்
- 1 கொத்து கருவேப்பிலை
- 1 கொத்து கொத்தமல்லி
- ½ மூடி தேங்காய் துண்டுகள் பொடியாக நறுக்கியது
- ¼ tsp மஞ்சள் துாள்
கிரேவி செய்ய
- 1 tbsp எண்ணெய்
- 1 கொத்து கருவேப்பிலை
- அரைத்த மசாலா
- 4 முட்டை அவித்தது
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் சிறிது
- கொத்தமல்லி சிறிது
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் இரண்டு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி, அரை டீஸ்பூன் சீரகம் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.
- பின் இதனுடன் 10 பல் பூண்டு, ஆறு வர மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு கொத்து கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
- பின் கடைசியாக அரை மூடி பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் மற்றும் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி பின் கடாயை கீழே இறக்கி குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
- இப்பொழுது நாம் வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்.
- அதில் ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து தாளித்து பின் நாம் அரைத்த மசாலா பேஸ்ட்டை தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
- பின் கிரேவி நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் நான்கு அவித்த முட்டைகளை பக்கவாட்டு பகுதியில் கீறி விட்டு கிரேவியில் சேர்க்கவும். பின் கிரேவி கெட்டியான பதத்திற்கு வரும் வரை வேக வைத்து. பின் இதனுடன் சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சரியான மங்களூர் முட்டை கிரேவி தயாராகிவிட்டது.
Nutrition
இதையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான முட்டை 65 செய்வது எப்படி ?