சூப்பரான சம்மர் ரெசிபி வீட்டிலயே ரெம்ப ஈஸியாக செய்யலாம் மாம்பழ கஸ்டர்ட் இப்படி ட்ரை பண்ண பாருங்க!
கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் ஜில்லென ஏதாவது சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் கோடை காலத்துக்கு இதமா மாம்பழ கஸ்டர்ட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். ப்ரூட் கஸ்டர்ட் மிகப் பிரபலமான ஒரு desserts வகை. இவை 19 ஆம் நூற்றாண்டின் போது இங்கிலாந்தில் உதயமானது என்று கூறப்படுகிறது. படிப்
கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் ஜில்லென ஏதாவது சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் கோடை காலத்துக்கு இதமா மாம்பழ கஸ்டர்ட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். ப்ரூட் கஸ்டர்ட் மிகப் பிரபலமான ஒரு desserts வகை. இவை 19 ஆம் நூற்றாண்டின் போது இங்கிலாந்தில் உதயமானது என்று கூறப்படுகிறது. படிப்படியாக இதனின் சுவை மற்றும் எளிமையான செய்முறையாளும் உலகம் முழுவதும் சென்றடைந்து இருக்கிறது. பண்டிகை காலங்களிலோ அல்லது திடீரென வீட்டிற்கு விருந்தினர்கள் வந்து விட்டாலோ மிக எளிதாக செய்து அவர்களை அசர வைக்க கூடிய ஒரு உணவு வகை இவை. ஃப்ரூட் கஸ்டர்ட்களில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இவை பழங்களை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு ஒரு வரப்பிரசாதம். ஏனெனில் பல வகையான பழங்களை ஒன்றாக சேர்த்து ப்ரூட் கஸ்டர்ட் ஆக செய்து அவர்களின் குழந்தைகளை மிக எளிதாக உண்ண வைத்து விடலாம்.
அவரவர் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்குப் பிடித்தமான பழ வகைகளையும் ஒன்றாக இதில் சேர்த்து கொள்ளலாம். அந்த வவையில் நாம் இன்று மாம்பழம் சேர்த்து செய்யப்போகிறோம். இதில் கூடுதலாக ஒரு வசதி என்னவென்றால் அவர்களுக்கு பிடித்தமான பிளேவர்களிலும் சிரமமின்றி செய்து விடலாம். வெறும் நாம் சேர்க்கும் கஸ்டர்ட் பவுடரை மாற்றினால் போதும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!