சூப்பரான சம்மர் ரெசிபி வீட்டிலயே ரெம்ப ஈஸியாக செய்யலாம் மாம்பழ கஸ்டர்ட் இப்படி ட்ரை பண்ண பாருங்க!

- Advertisement -

கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் ஜில்லென ஏதாவது சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் கோடை காலத்துக்கு இதமா மாம்பழ கஸ்டர்ட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். ப்ரூட் கஸ்டர்ட் மிகப் பிரபலமான ஒரு desserts வகை. இவை 19 ஆம் நூற்றாண்டின் போது இங்கிலாந்தில் உதயமானது என்று கூறப்படுகிறது. படிப்படியாக இதனின் சுவை மற்றும் எளிமையான செய்முறையாளும் உலகம் முழுவதும் சென்றடைந்து இருக்கிறது. பண்டிகை காலங்களிலோ அல்லது திடீரென வீட்டிற்கு விருந்தினர்கள் வந்து விட்டாலோ மிக எளிதாக செய்து அவர்களை அசர வைக்க கூடிய ஒரு உணவு வகை இவை. ஃப்ரூட் கஸ்டர்ட்களில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இவை பழங்களை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு ஒரு வரப்பிரசாதம். ஏனெனில் பல வகையான பழங்களை ஒன்றாக சேர்த்து ப்ரூட் கஸ்டர்ட் ஆக செய்து அவர்களின் குழந்தைகளை மிக எளிதாக உண்ண வைத்து விடலாம்.

-விளம்பரம்-

அவரவர் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்குப் பிடித்தமான பழ வகைகளையும் ஒன்றாக இதில் சேர்த்து கொள்ளலாம். அந்த வவையில் நாம் இன்று மாம்பழம் சேர்த்து செய்யப்போகிறோம். இதில் கூடுதலாக ஒரு வசதி என்னவென்றால் அவர்களுக்கு பிடித்தமான பிளேவர்களிலும் சிரமமின்றி செய்து விடலாம். வெறும் நாம் சேர்க்கும் கஸ்டர்ட் பவுடரை மாற்றினால் போதும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

- Advertisement -
Print
No ratings yet

மாம்பழ கஸ்டர்ட் | Mango Custard Recipe In Tamil‌

கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் ஜில்லென ஏதாவது சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் கோடை காலத்துக்கு இதமா மாம்பழ கஸ்டர்ட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். ப்ரூட் கஸ்டர்ட் மிகப் பிரபலமான ஒரு desserts வகை. இவை 19 ஆம் நூற்றாண்டின் போது இங்கிலாந்தில் உதயமானது என்று கூறப்படுகிறது. படிப்படியாக இதனின் சுவை மற்றும் எளிமையான செய்முறையாளும் உலகம் முழுவதும் சென்றடைந்து இருக்கிறது. பண்டிகை காலங்களிலோ அல்லது திடீரென வீட்டிற்கு விருந்தினர்கள் வந்து விட்டாலோ மிக எளிதாக செய்து அவர்களை அசர வைக்க கூடிய ஒரு உணவு வகை இவை. ஃப்ரூட் கஸ்டர்ட்களில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இவை பழங்களை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு ஒரு வரப்பிரசாதம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Dessert
Cuisine: Indian
Keyword: Mango Custurd
Yield: 4 People
Calories: 99kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 பால் பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 2 மாம்பழம்
  • 2 வாழைப்பழம்
  • 1/4 கப் மாதுளை
  • 2 டேபிள் ஸ்பூன் மேங்கோ கஸ்டர்ட் பவுடர்
  • 1/2 லி பால்
  • 1/2 கப் கண்டென்ஸ்டு மில்க்

செய்முறை

  • முதலில் மாம்பழத்தை நன்கு கழுவி விட்டு தோல் நீக்கி மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கஸ்டர்ட் பவுடரை அரை கப் பாலில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின் பால் கொதிக்க ஆரம்பித்ததும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் கொதிக்கும் பாலுடன் கஸ்டர்டு பவுடர் கலந்து வைத்துள்ள பாலை சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி மற்றொரு பவுளுக்கு மாற்றவும்.
  • பின் பாலின் சூடு ஆறியதும் அரைத்து வைத்துள்ள மாம்பழ விழுது, நறுக்கி வைத்துள்ள மாம்பழம், வாழைப்பழம், மாதுளை முத்துக்கள் எல்லாம் சேர்த்து நன்கு கலந்து பிரிட்ஜில் வைத்து ஒரு மணிநேரம் கழித்து வெளியே எடுக்கவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான மாம்பழ கஸ்டர்ட் தயார். தயார் செய்து வைத்துள்ள மாம்பழ கஸ்டர்ட் மேல் மாம்பழ துண்டுகள், மாதுளை முத்துக்கள் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Nutrition

Serving: 300g | Calories: 99kcal | Carbohydrates: 2.5g | Fat: 1.6g | Sodium: 26mg | Potassium: 277mg | Fiber: 2.6g | Sugar: 5.2g | Vitamin A: 76IU | Vitamin C: 60.1mg | Calcium: 14mg | Iron: 5.3mg

இதனையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!