மாம்பழம் வைத்து இப்படி ஜாம் கூட செய்யலாமா? மாம்பழ  ஜாம் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!!

ஜாம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் மாம்பழ ஜாம் என்றால் தனி ருசி தான். பழத்தை பார்ப்பதற்கு முன்பே அதன் வாசனை நாம் கிரங்கடிக்கச் செய்யும் ஒரு வகை பழம் தான் மாம்பழம். முக்கனிகளில் முதல் கனி பார்த்தாலே மனம் நிறையும் ருசியும் மனமும் நிறைந்தத

By Prem Kumar · 17/1/2024

ஜாம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் மாம்பழ ஜாம் என்றால்  தனி ருசி தான். பழத்தை பார்ப்பதற்கு முன்பே அதன் வாசனை நாம் கிரங்கடிக்கச் செய்யும் ஒரு வகை பழம் தான் மாம்பழம். முக்கனிகளில் முதல் கனி பார்த்தாலே மனம் நிறையும் ருசியும் மனமும் நிறைந்தது இப்படிப்பட்ட மாம்பழத்தில் நிறைய சத்துக்கள் உள்ளன.

மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள். இதை உண்டால் தொப்பை குறையும். கொழுப்பு குறையும்.இதில் உள்ள விட்டமின்  சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதில் உள்ள மாங்கனீஷ் கால்சியம் எலும்பிற்கு வலிமை சேர்கிறது. நாம் மாம்பழம் பழத்தில் ரசம் , கேசரி , ஜூஸ் கேக் போன்றவற்றை மாம்பழ எஸன்ஸ்ஸில் செய்து சாப்பிட்டு இருப்போம்.

இப்போது மாம்பழத்தில் ஜம்முன்னு ஜாம் செய்து சாப்பிட போறோம். இந்த மாம்பழ ஜாம் நாக்குல வச்ச உடனே கரைஞ்சு போயிடும். இந்த ஜாமை பிரட், சப்பாத்தி  தோசை ஏன் சும்மாவே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து மாம்பழ ஜாம டேஸ்ட் பண்ணிட்டே இருக்கலாம் . அந்த அளவுக்கு ருசியான சுவையான நல்ல மனம் மிக்க மாம்பழ ஜாம் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான மாங்காய் மோர் குழம்பு இப்படி ஒரு முறை மட்டும் செய்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!

Recipes AMP · Quick view
View full