ஜாம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் மாம்பழ ஜாம் என்றால் தனி ருசி தான். பழத்தை பார்ப்பதற்கு முன்பே அதன் வாசனை நாம் கிரங்கடிக்கச் செய்யும் ஒரு வகை பழம் தான் மாம்பழம். முக்கனிகளில் முதல் கனி பார்த்தாலே மனம் நிறையும் ருசியும் மனமும் நிறைந்தது இப்படிப்பட்ட மாம்பழத்தில் நிறைய சத்துக்கள் உள்ளன.
மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள். இதை உண்டால் தொப்பை குறையும். கொழுப்பு குறையும்.இதில் உள்ள விட்டமின் சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதில் உள்ள மாங்கனீஷ் கால்சியம் எலும்பிற்கு வலிமை சேர்கிறது. நாம் மாம்பழம் பழத்தில் ரசம் , கேசரி , ஜூஸ் கேக் போன்றவற்றை மாம்பழ எஸன்ஸ்ஸில் செய்து சாப்பிட்டு இருப்போம்.
இப்போது மாம்பழத்தில் ஜம்முன்னு ஜாம் செய்து சாப்பிட போறோம். இந்த மாம்பழ ஜாம் நாக்குல வச்ச உடனே கரைஞ்சு போயிடும். இந்த ஜாமை பிரட், சப்பாத்தி தோசை ஏன் சும்மாவே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து மாம்பழ ஜாம டேஸ்ட் பண்ணிட்டே இருக்கலாம் . அந்த அளவுக்கு ருசியான சுவையான நல்ல மனம் மிக்க மாம்பழ ஜாம் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.
மாம்பழ ஜாம் | Mango Jam Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 மாம்பழம்
- 1 கப் சர்க்கரை சீனி
- 1/2 எலுமிச்சை சாறு
செய்முறை
- மாம்பழத்தை சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு மேல் உள்ள தோலை எடுத்து விட வேண்டும்.
- மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் ஆக அரைத்து கொள்ள வேண்டும். வானொலியில் கடாயை வைத்து அதில் இந்த மாம்பழ கூழுடன் சர்க்கரை சேர்த்து 10- 15 நிமிடங்கள் நன்றாக கிளற வேண்டும்.
- மாம்பழ கூழில் உள்ள நீர் வற்றி வரும் 5 முதல் 8 நிமிடம் வரை நன்றாக கிளறி வேக வைக்க வேண்டும். ஜாம் பத்ததிற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மாம்பழ ஜாமில் எலுமிச்சை சாறுசிறிது சேர்க்க வேண்டும்.
- இந்த எலுமிச்சைசாறு சேர்ப்பதினால் சர்க்கரை கெட்டியாகமல் இருக்கும். நனறாக கிளறி ஒரு கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி கொண்டால் சுவையான ஜமஜம் மாம்பழ ஜாம் தயார்.
- இந்த ஜாமை ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டு தேவையான போது உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மூன்றுமுதல் நான்கு வாரங்கள் வரை இந்த ஜாமை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
Nutrition
இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான மாங்காய் மோர் குழம்பு இப்படி ஒரு முறை மட்டும் செய்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!