- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
மோர் குழம்பு மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவாகும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏராளமான உள்ளூர் வேறுபாடுகளுடன். ஆனால் இந்த மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மோர்க்குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்களில் மசாலா பொருட்கள் இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம். மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள். இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது.
நாம் மோர்க் குழம்பு அடிக்கடி சாப்பிட்டிருப்போம். அந்த மோர்க் குழம்பில் மாங்காய் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிதுதான். குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்றால் அது மோர்க் குழம்பு. சாம்பார், ரசம், புளிக்குழம்பு என ஒரேபோன்ற குழம்பு வைத்து சலித்துப்போனவர்களுக்கான சூப்பர் ஆப்ஷன், மோர்க்குழம்பு. அதிலும் சுவை அதிகரிக்க இங்கு பகிரப்பட்டுள்ள மாங்காய் சேர்த்து மோர் குழம்பு செய்து பாருங்கள். நிச்சயம் மறுமுறை செய்வீர்கள். ஒரு கப் தயிர் இருந்தாலே சட்டென்று செய்து அசத்தக் கூடிய இந்த மோர் குழம்பு, சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மாங்காய் கொஞ்சோண்டு சேர்த்தாலே அந்த குழம்பின் மணமும் ருசியும் தனி! அப்படியிருக்க, மாங்காய் மோர் குழம்பின் டேஸ்ட் பற்றி சொல்ல வேண்டுமா? தவிர, இதன் செய்முறை சுலபம். அதிக பொருட்கள் தேவையில்லை. குளிர் காலம் முடிந்து கோடைக்காலம் ஆரம்பமாக போகிறது. கோடை என்றாலே மாம்பழம் மற்றும் மாங்காய் தான். அத்தகைய மாங்காயில் ருசியான மோர் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் மாங்காய் ஊறுகாய் இப்படி செய்து பாருங்கள்! இந்த வருடம் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய ரெசிபியாம்!
Ingredients
Method
முதலில் துவரம்பருப்பு நன்கு அலசி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த துவரம்பருப்பு, தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாங்காய் துண்டுகளை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
மாங்காய் சிறிது வெந்ததும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கலந்து விடவும்.
அதன்பிறகு மாங்காய் நுரை கட்டி வரும் போது தயிரை நன்கு கடைந்து மாங்காயுடன் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றி கலந்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மாங்காய் மோர் குழம்பு தயார்.






