Advertisement
சைவம்

சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான மாங்காய் மோர் குழம்பு இப்படி ஒரு முறை மட்டும் செய்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement

மோர் குழம்பு மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவாகும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏராளமான உள்ளூர் வேறுபாடுகளுடன். ஆனால் இந்த ‌மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மோர்க்குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்களில் மசாலா பொருட்கள் இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம். மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள். இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது.

நாம் மோர்க் குழம்பு அடிக்கடி சாப்பிட்டிருப்போம். அந்த மோர்க் குழம்பில் மாங்காய் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிதுதான். குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்றால் அது மோர்க் குழம்பு. சாம்பார், ரசம், புளிக்குழம்பு என ஒரேபோன்ற குழம்பு வைத்து சலித்துப்போனவர்களுக்கான சூப்பர் ஆப்ஷன், மோர்க்குழம்பு. அதிலும் சுவை அதிகரிக்க இங்கு பகிரப்பட்டுள்ள மாங்காய் சேர்த்து மோர் குழம்பு செய்து பாருங்கள். நிச்சயம் மறுமுறை செய்வீர்கள். ஒரு கப் தயிர் இருந்தாலே சட்டென்று செய்து அசத்தக் கூடிய இந்த மோர் குழம்பு, சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ‌மாங்காய் கொஞ்சோண்டு சேர்த்தாலே அந்த குழம்பின் மணமும் ருசியும் தனி! அப்படியிருக்க, மாங்காய் மோர் குழம்பின் டேஸ்ட் பற்றி சொல்ல வேண்டுமா? தவிர, இதன் செய்முறை சுலபம். அதிக பொருட்கள் தேவையில்லை. குளிர் காலம் முடிந்து கோடைக்காலம் ஆரம்பமாக போகிறது. கோடை என்றாலே மாம்பழம் மற்றும் மாங்காய் தான். அத்தகைய மாங்காயில் ருசியான மோர் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

Advertisement

மாங்காய் மோர் குழம்பு | Mango Mor Kulambu Recipe In Tamil‌

Print Recipe
சாம்பார், ரசம், புளிக்குழம்பு என ஒரேபோன்ற குழம்பு வைத்து சலித்துப்போனவர்களுக்கான சூப்பர் ஆப்ஷன், மோர்க்குழம்பு. அதிலும் சுவை அதிகரிக்க இங்கு பகிரப்பட்டுள்ள மாங்காய் சேர்த்து மோர் குழம்பு செய்து பாருங்கள். நிச்சயம் மறுமுறை
Advertisement
செய்வீர்கள். ஒரு கப் தயிர் இருந்தாலே சட்டென்று செய்து அசத்தக் கூடிய இந்த மோர் குழம்பு, சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ‌மாங்காய் கொஞ்சோண்டு சேர்த்தாலே அந்த குழம்பின் மணமும் ருசியும் தனி! அப்படியிருக்க, மாங்காய் மோர் குழம்பின் டேஸ்ட் பற்றி சொல்ல வேண்டுமா? தவிர, இதன் செய்முறை சுலபம். அதிக பொருட்கள் தேவையில்லை. குளிர் காலம் முடிந்து கோடைக்காலம் ஆரம்பமாக போகிறது. கோடை என்றாலே மாம்பழம் மற்றும் மாங்காய் தான். அத்தகைய மாங்காயில் ருசியான மோர் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
Advertisement
Course LUNCH
Cuisine Indian
Keyword Mango Mor Kulambu
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 99

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 வாணலி

Ingredients

  • 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 கப் புளித்த தயிர்
  • 1 மாங்காய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 3 வர ‌மிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் துவரம்பருப்பு நன்கு அலசி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த துவரம்பருப்பு, தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாங்காய் துண்டுகளை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
  • மாங்காய் சிறிது வெந்ததும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கலந்து விடவும்.
  • அதன்பிறகு மாங்காய் நுரை கட்டி வரும் போது தயிரை நன்கு கடைந்து மாங்காயுடன்‌ சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வர‌ மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றி கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மாங்காய் மோர் குழம்பு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 99kcal | Carbohydrates: 25g | Protein: 4.5g | Fat: 1.6g | Potassium: 24mg | Fiber: 2.6g | Vitamin A: 76IU | Vitamin C: 60mg | Calcium: 14mg | Iron: 1.3mg

இதனையும் படியுங்கள் :‌ காரசாரமான ருசியில் மாங்காய் ஊறுகாய் இப்படி செய்து பாருங்கள்! இந்த வருடம் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய ரெசிபியாம்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 மணி நேரம் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

11 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

22 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago