வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் மாம்பழ மைசூர் பாக் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்..!
மைசூர் பாக் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. கோதுமை மைசூர் பாக், நெய் மைசூர் பாக், சாக்லேட் மைசூர் பாக் என பல்வேறு வகையான மைசூர் பாக்குகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே மைசூர் பாக் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. மாம்பழத்தை வைத்து சுவையான மைசூர் பாக் எப்
மைசூர் பாக் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. கோதுமை மைசூர் பாக், நெய் மைசூர் பாக், சாக்லேட் மைசூர் பாக் என பல்வேறு வகையான மைசூர் பாக்குகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே மைசூர் பாக் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. மாம்பழத்தை வைத்து சுவையான மைசூர் பாக் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பகுதியில் பார்க்கப் போகிறோம். மாம்பழம் சுவையானது என்பதால், இதை எப்படி தயாரித்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக மாம்பழத்தைக் கொண்டு மைசூர் பாக் தயாரித்தால், அதன் சுவை இன்னும் அலாதியாக இருக்கும். கோடைக்காலத்தில் மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய பழத்தில் ஒன்று மாம்பழம். மாம்பழத்தில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள், தாது சத்துகள் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல் சக்தி கிடைக்கும். மாம்பழத்தில் கிருமிகளை அழிக்கும் சிறந்த இயற்கை ரசாயனங்கள் உள்ளன.
இதை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்புகள் நன்றாக இருக்கும். இதில் மைசூர் பாக் செய்து கொடுத்தால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை அனைத்து விசேஷ தினங்கள், வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், சுப தினங்கள் போன்றவற்றின் போது வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம். சத்துக்கள் நிறைந்த மாம்பழத்தில் செய்த இந்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருக்கும். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை ருசித்து சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!