Home ஸ்நாக்ஸ் வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் மாம்பழ மைசூர் பாக் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்..!

வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் மாம்பழ மைசூர் பாக் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்..!

மைசூர் பாக் ‌பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. கோதுமை மைசூர் பாக், நெய் மைசூர் பாக், சாக்லேட் மைசூர் பாக் என பல்வேறு வகையான மைசூர் பாக்குகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே மைசூர் பாக் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. மாம்பழத்தை வைத்து சுவையான மைசூர் பாக் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பகுதியில் பார்க்கப் போகிறோம். மாம்பழம் சுவையானது என்பதால், இதை எப்படி தயாரித்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக மாம்பழத்தைக் கொண்டு மைசூர் பாக் தயாரித்தால், அதன் சுவை இன்னும் அலாதியாக இருக்கும். கோடைக்காலத்தில் மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய பழத்தில் ஒன்று மாம்பழம். மாம்பழத்தில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள், தாது சத்துகள் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல் சக்தி கிடைக்கும். மாம்பழத்தில் கிருமிகளை அழிக்கும் சிறந்த இயற்கை ரசாயனங்கள் உள்ளன.

-விளம்பரம்-

இதை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்புகள் நன்றாக இருக்கும். இதில் மைசூர் பாக் செய்து கொடுத்தால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை அனைத்து விசேஷ தினங்கள், வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், சுப தினங்கள் போன்றவற்றின் போது வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம். சத்துக்கள் நிறைந்த மாம்பழத்தில் செய்த இந்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருக்கும். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை ருசித்து சாப்பிடுவார்கள்.

Print
No ratings yet

மாம்பழ மைசூர் பாக் | Mango Mysore Pak Recipe In Tamil

மைசூர் பாக் ‌பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. கோதுமை மைசூர் பாக், நெய் மைசூர் பாக், சாக்லேட் மைசூர் பாக் என பல்வேறு வகையான மைசூர் பாக்குகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே மைசூர் பாக் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. மாம்பழத்தை வைத்து சுவையான மைசூர் பாக் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பகுதியில் பார்க்கப் போகிறோம். மாம்பழம் சுவையானது என்பதால், இதை எப்படி தயாரித்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக மாம்பழத்தைக் கொண்டு மைசூர் பாக் தயாரித்தால், அதன் சுவை இன்னும் அலாதியாக இருக்கும். கோடைக்காலத்தில் மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய பழத்தில் ஒன்று மாம்பழம். இதை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்புகள் நன்றாக இருக்கும். இதில் மைசூர் பாக் செய்து கொடுத்தால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Mango Mysore Pak
Yield: 4 People
Calories: 99kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலை மாவு
  • 2 மாம்பழம்
  • 1/2 கப் பால்
  • 1 கப் சர்க்கரை
  • 1 1/2 கப் நெய்

செய்முறை

  • முதலில் பழுத்த மாம்பழத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • பின் ஒரு பௌலில் கடலைமாவு மற்றும் நெய் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நாம் அரைத்த மாம்பழ விழுது, பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • இந்த மாம்பழ கலவை கொஞ்சம் கெட்டியானதும் நாம் நெய் சேர்த்து கலந்து வைத்துள்ள கடலை மாவு கலவையை சேர்த்து கை விடாமல் நன்கு கலந்து விடவும்.
  • பின் மீண்டும் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வந்ததும் இதை எடுத்து ஒரு தட்டில் ஊற்றி ஆற விடவும்.
  • சூடு ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் வித்தியாசமான மாம்பழ மைசூர் பாக் தயார். இது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 99kcal | Carbohydrates: 5.2g | Protein: 4.1g | Fat: 6g | Sodium: 26mg | Potassium: 277mg | Fiber: 2.6g | Sugar: 22.5g | Vitamin A: 76IU | Vitamin C: 60.1mg | Calcium: 61mg | Iron: 33mg

இதனையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!