ருசியான மாங்காய் தக்காளி சாதம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்களேன்! திரும்ப திரும்ப செய்து சாப்பிட தோன்றும்!

- Advertisement -

பொதுவாக மாங்காய் அனைவருக்குமே பிடித்த ஒரு காய் தான். நமக்குத் தெரிந்த வரை மாங்காயை பெரும்பாலும் ஊறுகாய் செய்ய தான் பயன்படுத்துவோம். அது மட்டும் இன்றி ஒரு சில குழம்புகளை மாங்காய் சேர்த்து செய்வோம் அதன் சுவையும் பிரமாதமாகவே இருக்கும்.

-விளம்பரம்-

இதை சாதமாக செய்வதாக இருந்தால் மாங்காய் சாதம் செய்வோம். இந்த சமையல் குறிப்பு பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக மாங்காவை வைத்து மாங்காய் தக்காளி சாதம் . மாங்காய் உடல் எடையை குறைக்க உதவுகிறது மாம்பழத்தை விட மாங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது.மாங்காய் வயிற்றுக்கு நல்லது, இதயத்திற்கு நல்லது.

- Advertisement -

மாங்காய் தக்காளி சாதம் எல்லாம் அந்தந்த சீசனில் செய்து சாப்பிட்டால் தான் முடியும். எல்லா காலத்திலும் நமக்கு மாங்காய் கிடைக்காது அல்லவா. தற்போது மாங்காய் சீசன். ஒருமுறை உங்களுடைய வீட்டில் மாங்காய் தக்காளி சாதம் இப்படி செய்து பாருங்கள். அத்தனை ருசியாக இருக்கும். புளிப்பு உப்பு காரம், சில மசாலா பொருட்களின் வாசத்தோடு அட்டகாசமான வித்தியாசமான ஒரு கலவை சாதம் எப்படி செய்வது. நேரத்தைக் கடத்தாமல் ரெசிப்பிக்குள் செல்வோம் வாருங்கள்.

Print
5 from 1 vote

மாங்காய் தக்காளி சாதம் | Mango Tomato Rice In Tamil

பொதுவாக மாங்காய் அனைவருக்குமே பிடித்த ஒருகாய் தான். நமக்குத் தெரிந்த வரை மாங்காயை பெரும்பாலும் ஊறுகாய் செய்ய தான் பயன்படுத்துவோம்.அது மட்டும் இன்றி ஒரு சில குழம்புகளை மாங்காய் சேர்த்து செய்வோம் அதன் சுவையும் பிரமாதமாகவே இருக்கும். இதை சாதமாக செய்வதாக இருந்தால் மாங்காய் சாதம் செய்வோம். இந்த சமையல் குறிப்புபதிவில் கொஞ்சம் வித்தியாசமாக மாங்காவை வைத்து மாங்காய் தக்காளி சாதம் . மாங்காய் உடல் எடையை குறைக்க உதவுகிறது மாம்பழத்தை விட மாங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மாங்காய் வயிற்றுக்கு நல்லது, இதயத்திற்கு நல்லது.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Mango Tomato Rice
Yield: 4
Calories: 493kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 2 கப் புழுங்கலரிசி
 • 1 சிறிய மாங்காய்
 • 4 பெரிய வெங்காயம்
 • 4 காய்ந்த மிளகாய்
 • 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
 • 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
 • 2 தக்காளி
 • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
 • தண்ணீர் தேவைக்கேற்ப
 • உப்பு தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு

 • கடுகு சிறிது
 • கறிவேப்பிலை சிறிது

செய்முறை

 • அரிசியைக் கழுவி சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.
 • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
 • பின்னர் தக்காளி, மாங்காய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்
 • சிறிது தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
 • பத்து நிமிடத்திற்கு பிறகு இறக்கி ஆறியதும் சாதத்துடன் கலந்து பரிமாற மாங்காய்த் தக்காளிச் சாதம் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 493kcal | Carbohydrates: 69g | Protein: 4.9g | Fat: 25g | Sodium: 16mg | Potassium: 432mg | Calcium: 32mg | Iron: 4.1mg

இதையும் படியுங்கள் : தக்காளி சேர்க்காமல் ருசியான மாங்காய் ரசம் இப்படி செய்து சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட அசத்தலாக இருக்கும்!