சாதத்துடன் சாப்பிட ருசியான மரவள்ளி கிழங்கு மசியல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி ருசி!

- Advertisement -

இப்போ மரவள்ளி கிழங்கு சீசன் ஆரம்பிச்சது இந்த சீசன்ல கிடைக்கிற இந்த மரவள்ளிக்கிழங்கு வாங்கி அவிச்சு சீனி கூட தொட்டு சாப்பிடும்போது அவ்வளவு நல்லா இருக்கும்.இதை மரவள்ளி கிழங்கில் அடை பொரியலாம் கூட பண்ணுவாங். அப்படி இந்த மரவள்ளிக்கிழங்கு வச்சு நம்ம இப்ப பண்ணப்போற உணவு மரவள்ளிக்கிழங்கு மசியல். இந்த மரவள்ளிக்கிழங்கு அதிக அளவு புரோட்டினும் கார்போஹைட்ரேடும் நிறைய இருக்கிறதுனால அதிக அளவு சத்து வாய்ந்தது.

-விளம்பரம்-

இந்த சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கு கிடைச்சுச்சுன்னா கண்டிப்பா வாங்கி எல்லாருமே ஒரு தடவ இந்த மாதிரி மசியல் செய்து சாப்பிட்டு பாருங்க. சாதத்துக்கு கூட சேர்த்து சாப்பிடுவதற்கும் நல்லா இருக்கும். அதே மாதிரி வத்தக்குழம்பு கார குழம்புக்கெல்லாம் சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையா இருக்கும். இந்த சுவையான மரவள்ளிக்கிழங்கு மசியல் எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த சுவையான மரவள்ளிக்கிழங்கு மசியல் ஓட சுவை எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -

உங்க வீட்ல இந்த மரவள்ளிக்கிழங்கு மசியல் மட்டும் செய்து வச்சீங்கன்னா கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது. அப்படி எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க .எல்லாருக்கும் மரவள்ளிகிழங்கு மசியல் சுவையா மட்டும் இல்லாம ஆரோக்கியமா இருக்கறதுனால சீசன் இல்லாத டைம்ல கூட இதே மாதிரி டைப்ல வேற ஏதாவது பண்ணி கொடு அப்படி என்ற மாதிரி கேட்கிற அளவுக்கு ரொம்பவே பிடிச்சு விடும் அவங்களுக்கு இந்த மரவள்ளிக்கிழங்கு மசியல். சரி வாங்க சுவையான இந்த மரவள்ளிக்கிழங்கு மசியல எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Print
No ratings yet

மரவள்ளி கிழங்கு மசியல் | Maravalli Kilangu Masiyal Recipe in Tamil

இப்போ மரவள்ளி கிழங்கு சீசன் ஆரம்பிச்சது இந்த சீசன்ல கிடைக்கிற இந்த மரவள்ளிக்கிழங்கு வாங்கி அவிச்சு சீனி கூட தொட்டு சாப்பிடும்போது அவ்வளவு நல்லா இருக்கும்.இதை மரவள்ளி கிழங்கில் அடை பொரியலாம் கூட பண்ணுவாங். அப்படி இந்த மரவள்ளிக்கிழங்கு வச்சு நம்ம இப்ப பண்ணப்போற உணவு மரவள்ளிக்கிழங்கு மசியல். இந்த மரவள்ளிக்கிழங்கு அதிக அளவு புரோட்டினும் கார்போஹைட்ரேடும் நிறைய இருக்கிறதுனால அதிக அளவு சத்து வாய்ந்தது. இந்த சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கு கிடைச்சுச்சுன்னா கண்டிப்பா வாங்கி எல்லாருமே ஒரு தடவ இந்த மாதிரி மசியல் செய்து சாப்பிட்டு பாருங்க. சாதத்துக்கு கூட சேர்த்து சாப்பிடுவதற்கும் நல்லா இருக்கும். அதே மாதிரி வத்தக்குழம்பு கார குழம்புக்கெல்லாம் சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையா இருக்கும்.
Prep Time15 minutes
Active Time25 minutes
Total Time40 minutes
Course: Aviyal, masiyal
Cuisine: Kerala
Keyword: Andhra Keerai Masiyal, Greens Garlic Masiyal, Horse Gram Masiyal, maravalli adai, maravalli kizhangu payasam
Yield: 7 people
Calories: 152kcal
Cost: 50

Equipment

  • 1 குக்கர்
  • 1 கரண்டி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 மரவள்ளி கிழக்கு
  • 1 கப் தேங்காய்
  • புளி திராட்சை அளவு
  • 3 பல் பூண்டு
  • 1/4 ஸ்பூன் சீரகம்
  • 1/4 ஸ்பூன் மிளகு
  • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மரவள்ளிக்கிழங்கை தோலை எடுத்துவிட்டு சதுர வடிவ துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் உப்பு சேர்த்து கிழங்கை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • கிழங்கை அமுக்கினால் மாவு போல் மசிய வேண்டும் அந்த பதத்திற்கு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பூண்டு, புளி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு மஞ்சள் தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு வேக வைத்து நீரை வடித்து விட்டு தனியாக எடுத்து வைத்துள்ள மரவள்ளி கிழங்கில் இந்த அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
  • பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மசியல் கரண்டி அல்லது மத்தால் நன்றாக கிழங்கை மசித்து விட வேண்டும். கிழங்கை மசித்த பிறகு பரிமாறினால் சுவையான மரவள்ளி கிழங்கு மசியல் தயார்.

Nutrition

Calories: 152kcal | Carbohydrates: 25g | Protein: 15g | Fat: 9g