காரசாரமான ருசியில் கமகமனு மத்தி மீன் தொக்கு ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன் தொக்கை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர். ஆனால் சரியான பக்குவத்தில் நம் பாட்டி கா

By Prem Kumar · 25/2/2024

கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன் தொக்கை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர். ஆனால் சரியான பக்குவத்தில் நம் பாட்டி காலத்தில் செய்தது போன்ற சுவையில் பலராலும் செய்ய முடிவதில்லை. அவ்வாறு பாட்டியின் கை பக்குவத்தில் வைக்கக் கூடிய சுவையான மீன் தொக்கை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மீன்களிலேயே மிகவும் சத்தானது மட்டுமின்றி, அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டியது, இந்த மத்தி மீன். ஒருகாலத்தில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட, மத்தி மீனுக்கு இன்று டிமாண்டு கூடிவிட்டது. காரணம், மனித உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தனை புரதச்சத்தும் இந்த மீனில் உள்ளதுதான்.

பொதுவாக மீன் தொக்கு என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் மத்தி மீன் தொக்கு என்றால் எப்படி இருக்கும். மத்தி மீனில் அதிகம் முள் இருந்தாலும் இதன் ருசி எப்போதும் தனித்துவமாக இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடக்கூடிய மீன் இது. புரதமும், அதிகப்படியான கொழுப்பும், நாம் சாப்பிட்ட பிறகு பல மணி நேரங்கள் வரை பசி உணர்வை தூண்டாது. இதனால், எடை குறைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையையும் குறைக்கும். கேரளாவில் மத்தி மீன் மிகவும் பிரபலம். ஆனால் தற்போது இந்த மீன் எல்லா மாவட்டங்களிலும் கிடைக்கிறது. இன்று சூப்பரான கிராமத்து ஸ்டைல் மத்தி மீன் தொக்கு எப்படி எளிய முறையில் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை மீன் வறுவல் இப்படி வித்யாசமாக லெமன் பெப்பர் சேர்த்து செஞ்சி பாருங்க காரசாரமான ரெசிபி!

Recipes AMP · Quick view
View full