Advertisement
சைவம்

காரசாரமான ருசியில் மீல் மேக்கர் மிளகு வறுவல் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

எல்லோருக்கும் மீல் மேக்கர் பிடிக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம். அந்த வகையில் ரொம்ப சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இந்த மீல்மேக்கர்‌ மிளகு வறுவல் எப்படி நாம் செய்ய இருக்கிறோம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அனைத்து நாட்களிலும் அசைவ உணவு எடுத்துக்கொள்ள முடியாது. அந்த நாட்களில் இந்த மீல் மேக்கர் ரெசிபி செய்து சாப்பிடுவது, அசைவ உணவு ருசிக்கே டஃப் கொடுக்கும். பெரும்பாலும் இந்த மீல்மேக்கர் உணவு வகைகள் குழந்தைகள் அதிகம் உண்பதில்லை, ஆனாலும் சத்துக்கள் அதிகம் உள்ளது.

இதை குழந்தைகளுக்கு பிடித்த உணவான வறுத்து செய்து கொடுத்தால் நல்லது தானே. மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் சாப்பிட ஏதாவது கேட்பார்கள். அப்படி கேட்கும் போது, அவர்களுக்கு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், மீல் மேக்கர் வறுவல் செய்து கொடுங்கள். இந்த மீல் மேக்கர் வறுவலை காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போதும் செய்து கொடுக்கலாம். ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும் அதுவும் விலை மலிவாகவும் இருக்க வேண்டும் என்றால், இந்த சோயா மிளகு வறுவலை ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாம். சாதத்துடனும் சப்பாத்தியுடன் தொட்டும் இதை சாப்பிடலாம். அது நம்முடைய விருப்பம் தான். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

Advertisement

மீல் மேக்கர் மிளகு வறுவல் | Meal Maker Pepper Fry Recipe In Tamil

Print Recipe
எல்லோருக்கும் மீல் மேக்கர் பிடிக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக
Advertisement
செய்து ரசித்து சாப்பிடலாம். அந்த வகையில் ரொம்ப சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இந்த மீல்மேக்கர்‌ மிளகு வறுவல் எப்படி நாம் செய்ய இருக்கிறோம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அனைத்து நாட்களிலும் அசைவ உணவு எடுத்துக்கொள்ள முடியாது. அந்த நாட்களில் இந்த மீல் மேக்கர் ரெசிபி செய்து சாப்பிடுவது, அசைவ உணவு ருசிக்கே டஃப் கொடுக்கும். மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் சாப்பிட ஏதாவது கேட்பார்கள். அப்படி கேட்கும் போது,
Advertisement
அவர்களுக்கு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், மீல் மேக்கர் வறுவல் செய்து கொடுங்கள். மேலும் இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போதும் செய்து கொடுக்கலாம்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Meal Maker Pepper Fry
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 352

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 50 கி மீல் மேக்கர்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 வர ‌மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்‌ இதனை தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், சோம்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பின் மீல் மேக்கர் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 5 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
  • தண்ணீர் சுண்டி வந்ததும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மீல் மேக்கர் மிளகு வறுவல் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 352kcal | Carbohydrates: 6.3g | Protein: 52g | Fat: 2.5g | Sodium: 18mg | Potassium: 24mg | Fiber: 1.3g | Calcium: 35mg | Iron: 20mg

இதனையும் படியுங்கள் : ருசியான மீல்மேக்கர் கட்லெட் இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ஸ்நாக்ஸ் ரெடி!

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

3 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

8 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

18 மணி நேரங்கள் ago