ருசியான மீல்மேக்கர் கட்லெட் இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ஸ்நாக்ஸ் ரெடி!

soya cutlet
- Advertisement -

குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. மொறு மொறுனு மீல்மேக்கர் கட்லெட் செய்து கொடுத்து பாருங்க. விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் எப்பொழுது செய்விக்கனு கேட்டு

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : ராமேஸ்வரம் ஸ்பெஷல் காரசாரமான மீன் கட்லெட் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

- Advertisement -

தொல்லை பண்ணுவாங்க. ஏனென்றால் அளவு சுவையாக இருக்கும். இந்த மீல்மேக்கர் கட்லெட் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

soya cutlet
Print
No ratings yet

மீல்மேக்கர் கட்லெட் | Soya Cutlet Recipe In Tamil

குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. மொறு மொறுனு மீல்மேக்கர் கட்லெட் செய்து கொடுத்து பாருங்க. விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் எப்பொழுது செய்விக்கனு கேட்டு தொல்லை பண்ணுவாங்க. ஏனென்றால் அளவு சுவையாக இருக்கும். இந்த மீல்மேக்கர் கட்லெட் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time7 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: evening, Snack
Cuisine: Indian, TAMIL
Keyword: soya cutlet, மீல்மேக்கர் கட்லெட்
Yield: 4 people

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 50 கிராம் மீல்மேக்கர்
  • ¼ கிலோ உருளைக்கிழங்கு வேகவைத்தது
  • 2 ஸ்பூன் கான்ப்ளவர் மாவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள் கொஞ்சம்
  • ½ ஸ்பூன் கரம் மசாலா
  • ½ ஸ்பூன் சீரக தூள்
  • ½ ஸ்பூன் மல்லி தூள்
  • 2 முட்டை
  • 1 கப் பிரெட் க்ராம்ஸ்

செய்முறை

  • முதலில் மீல்மேக்கரை சுடுதண்ணீரில் சேர்த்து ஊறவைக்கவும். ஊறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து குக்கரில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வேக வைத்து மசித்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கையும், அரைத்துவைத்துள்ள மீல்மேக்கர் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசைந்து தேவையான வடிவில் தட்டிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு குட்டி பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
  • ஒரு தட்டில் பிரெட் க்ராம்ஸ் கொட்டி வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள மீல்மேக்கரை ஒவொன்றாக எடுத்து முட்டையில் நினைத்து பிராட் கிராம்ஸில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.