மணக்க மணக்க மீன் கட்லெட் வைப்பது எப்படி? ஒருமுறை இப்படி சுவைத்து விட்டால், இதே மீன் கட்லெட் தான் சமைக்க வேண்டும் என்று அனைவரும் அடம் பிடிப்பார்கள்.மீன் கட்லெட் வார இறுதிகளில் குடும்பத்தோடு சுவைத்து மகிழ ஒரு அருமையான உணவாகும். முள் இல்லாத மீன் வாங்கி இப்படி மீன் கட்லெட் ஒரு முறை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள். ஹோட்டல் களில் மட்டுமே நாம் சுவைத்து மகிழும் மீன் கட்லெட் இதே
இதையும் படியுங்கள்: சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க!
செய்முறையில் செய்தால் ,நாவூறும் சுவையில் மீன் கட்லெட் வீட்டிலே அடிக்கடி செய்து ருசிக்கலாம். இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீன் கட்லெட்டை ஹோட்டல் ஸ்டைலில் சமைக்க போகின்றோம். மீன் வசம் புடிக்காமல் சாப்பிடாதவர் கூட இந்த மீன் கட்லெட்டை விரும்பி உண்பர். வாங்க நாமும் இந்த வித்தியாசமான மீன் கட்லெட் கற்றுக் கொள்வோம்.
மீன் கட்லெட் | Fish Cutlet Recipe in Tamil
Equipment
- கரண்டி
- தோசை கல்
- கடாய்
- பவுள்
தேவையான பொருட்கள்
- 3 மீன்
- 1 உருளைக்கிழங்கு
- 1 வெங்காயம்
- 4 பச்சைமிளகாய்
- 1 tsp சீரகத்தூள்
- 1 tsp மிளகுத்தூள்
- 1 tsp மிளகாய்த்தூள்
- 1 tbsp இஞ்சி,பூண்டுவிழுது
- 3 ரஸ்க்
- 2 முட்டை
- 1 எலுமிச்சை
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- 5 tbsp எண்ணெய்
செய்முறை
- மீன் கட்லெட் செய்ய முதலில் மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.
- அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
- முட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாகநமக்கு பிடித்த வடிவில் தட்டி முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்சுவையான மீன் கட்லெட் தயார்.