காரசாரமான ருசியில் மீல் மேக்கர் மிளகு வறுவல் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

- Advertisement -

எல்லோருக்கும் மீல் மேக்கர் பிடிக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம். அந்த வகையில் ரொம்ப சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இந்த மீல்மேக்கர்‌ மிளகு வறுவல் எப்படி நாம் செய்ய இருக்கிறோம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அனைத்து நாட்களிலும் அசைவ உணவு எடுத்துக்கொள்ள முடியாது. அந்த நாட்களில் இந்த மீல் மேக்கர் ரெசிபி செய்து சாப்பிடுவது, அசைவ உணவு ருசிக்கே டஃப் கொடுக்கும். பெரும்பாலும் இந்த மீல்மேக்கர் உணவு வகைகள் குழந்தைகள் அதிகம் உண்பதில்லை, ஆனாலும் சத்துக்கள் அதிகம் உள்ளது.

-விளம்பரம்-

இதை குழந்தைகளுக்கு பிடித்த உணவான வறுத்து செய்து கொடுத்தால் நல்லது தானே. மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் சாப்பிட ஏதாவது கேட்பார்கள். அப்படி கேட்கும் போது, அவர்களுக்கு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், மீல் மேக்கர் வறுவல் செய்து கொடுங்கள். இந்த மீல் மேக்கர் வறுவலை காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போதும் செய்து கொடுக்கலாம். ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும் அதுவும் விலை மலிவாகவும் இருக்க வேண்டும் என்றால், இந்த சோயா மிளகு வறுவலை ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாம். சாதத்துடனும் சப்பாத்தியுடன் தொட்டும் இதை சாப்பிடலாம். அது நம்முடைய விருப்பம் தான். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

- Advertisement -
Print
4.34 from 3 votes

மீல் மேக்கர் மிளகு வறுவல் | Meal Maker Pepper Fry Recipe In Tamil

எல்லோருக்கும் மீல் மேக்கர் பிடிக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம். அந்த வகையில் ரொம்ப சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இந்த மீல்மேக்கர்‌ மிளகு வறுவல் எப்படி நாம் செய்ய இருக்கிறோம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அனைத்து நாட்களிலும் அசைவ உணவு எடுத்துக்கொள்ள முடியாது. அந்த நாட்களில் இந்த மீல் மேக்கர் ரெசிபி செய்து சாப்பிடுவது, அசைவ உணவு ருசிக்கே டஃப் கொடுக்கும். மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் சாப்பிட ஏதாவது கேட்பார்கள். அப்படி கேட்கும் போது, அவர்களுக்கு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், மீல் மேக்கர் வறுவல் செய்து கொடுங்கள். மேலும் இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போதும் செய்து கொடுக்கலாம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Meal Maker Pepper Fry
Yield: 4 People
Calories: 352kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 50 கி மீல் மேக்கர்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 வர ‌மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்‌ இதனை தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், சோம்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பின் மீல் மேக்கர் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 5 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
  • தண்ணீர் சுண்டி வந்ததும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மீல் மேக்கர் மிளகு வறுவல் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 352kcal | Carbohydrates: 6.3g | Protein: 52g | Fat: 2.5g | Sodium: 18mg | Potassium: 24mg | Fiber: 1.3g | Calcium: 35mg | Iron: 20mg

இதனையும் படியுங்கள் : ருசியான மீல்மேக்கர் கட்லெட் இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ஸ்நாக்ஸ் ரெடி!