மீல் மேக்கர் வாங்கி ஒரு தடவை இந்த மாதிரி மீல்மேக்கர் பேப்பர் ரோஸ்ட் செஞ்சு பாருங்க

- Advertisement -

பொதுவான நம்ம வீட்ல மட்டன் சிக்கன் மீன் அப்படின்னு நான் வெஜ் சமைக்காத அப்போ இந்த மீல் மேக்கர் தான் செய்வோம் என இந்த மீல்மேக்கரில் சிக்கன் மட்டன் செய்ற மாதிரியே கிரேவி செஞ்சா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த மீல் மேக்கர் வச்சு நம்ம செய்ற ரெசிபிஸ்ல எல்லாருக்கும் மீல் மேக்கர் 65 தான் ரொம்ப பிடிக்கும்.அது தவிர மீல் மேக்கர் கிரேவி வச்சு பிரியாணியோட சாப்பிடும்போது ரொம்பவே அட்டகாசமான டேஸ்ட்ல சூப்பரா இருக்கும்.

-விளம்பரம்-

இந்த மீல் மேக்கர் வீட்ல இருந்தா போதும் குழந்தைங்க சிக்கன் 65 கேட்கும் போது டக்குனு மீல் மேக்கர் வச்சு 65 செஞ்சு இது தான் சிக்கன் 65 ஏமாத்தி கூட குழந்தைகளுக்கு கொடுத்திடலாம் அதே மாதிரி சிக்கன் டேஸ்ட்ல செம்ம அட்டகாசமா இருக்கும். ஈவினிங் டைம்ல குழந்தைங்க ஸ்நாக்ஸ் கேட்டாலும் இந்த மீல் மேக்கர் 65 நம்ம செஞ்சு கொடுக்கலாம்.

- Advertisement -

அந்த வகையில எல்லா வகையான சாதத்துக்கும் சைடு டிஷ்வா வச்சு சாப்பிடக்கூடிய அட்டகாசமான மீல்மேக்கர் பெப்பர் ரோஸ்ட் தான் இப்ப பார்க்க போறோம். இந்த மீல் மேக்கர் பெப்பர் ரோஸ்ட் செய்வது ரொம்பவே ஈஸி. குறைவான பொருட்களை வைத்து ரொம்ப சீக்கிரத்துல சட்டுனு இந்த மீல் மேக்கர் பேப்பர் ரோஸ்ட் செஞ்சுடலாம். வாங்க இந்த சிம்பிளான சூப்பர் டேஸ்ட்டான மீல் மேக்கர் பெப்பர் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

மீல்மேக்கர் பேப்பர் ரோஸ்ட் | Meal Maker Pepper Roast

மீல் மேக்கர் வீட்ல இருந்தா போதும் குழந்தைங்க சிக்கன் 65 கேட்கும் போது டக்குனு மீல் மேக்கர் வச்சு65 செஞ்சு இது தான் சிக்கன் 65 ஏமாத்தி கூட குழந்தைகளுக்கு கொடுத்திடலாம் அதே மாதிரிசிக்கன் டேஸ்ட்ல செம்ம அட்டகாசமா இருக்கும். ஈவினிங் டைம்ல குழந்தைங்க ஸ்நாக்ஸ் கேட்டாலும்இந்த மீல் மேக்கர் 65 நம்ம செஞ்சு கொடுக்கலாம்.  மீல் மேக்கர் பெப்பர் ரோஸ்ட் செய்வது ரொம்பவே ஈஸி. குறைவான பொருட்களை வைத்து ரொம்ப சீக்கிரத்துலசட்டுனு இந்த மீல் மேக்கர் பேப்பர் ரோஸ்ட் செஞ்சுடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Fry
Cuisine: tamil nadu
Keyword: Meal Maker Pepper Roast
Yield: 4
Calories: 489kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் மீல் மேக்கர்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கொள்ளவும்
  • பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம் கருவேப்பிலை உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ளவும்
  • பிறகு ஊற வைத்த மீல் மேக்கரில் உள்ள தண்ணீரை நன்றாக பிழிந்து எடுத்து அதனை சேர்த்துக் கொள்ளவும். மீல் மேக்கர் ஓரளவு வெந்தவுடன் அதில் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டவும்.
  • பிறகு கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி மீல் மேக்கர் நன்றாக வெந்து வருவதற்கு சிறிதளவு தண்ணீர்ஊற்றி வேக வைக்கவும்.
  • இறுதியாக கொத்தமல்லி இலைகள் சேர்ந்து இறக்கினால் சுவையான சிம்பிளான மீல்மேக்கர் பேப்பர் ரோஸ்ட் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 489kcal | Carbohydrates: 34g | Sodium: 252mg | Potassium: 356mg | Fiber: 4g | Calcium: 36mg

இதையும் படியுங்கள் : குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான நேந்திரம் வாழைப்பழம் ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!