பொதுவா குழந்தைகளுக்கு நம்ம என்ன ஆரோக்கியமா கொடுக்கிறது அப்படின்னு யோசிச்சு யோசிச்சு தான் செஞ்சு கொடுப்போம். அந்த வகையில குழந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள் கீரைகளில் எல்லாமே அதிகமாக கொடுத்தால்தான் சின்ன குழந்தைகளில் இருந்தே அவங்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா சத்துக்களும் அதிகமாக கிடைக்கும். ஆனா குழந்தைகள் கீரைகள் காய்கறிகள் பழங்கள் எல்லாமே அப்படியே கொடுத்தா சாப்பிடுவது ரொம்ப கஷ்டம் அதனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி அந்த பழங்கள் காய்கறிகள் வச்சு நம்ம ஏதாவது கொஞ்சம் டிஃபரண்டா செஞ்சு கொடுத்தா அவங்க விரும்பி சாப்பிடுவாங்க.
அந்த வகையில் குழந்தைகள் இருந்த பெரியவங்க வரைக்கும் எல்லாருமே கண்டிப்பா சாப்பிட குடிக்க ஒரு பழம் நா அது வாழைப்பழம் அந்த வாழைப்பழம் அப்படியே குடுத்தா குழந்தைங்க சாப்பிடுறது கஷ்டம் அதனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி நல்லா இனிப்பா அதை வகையில் நல்ல ஆரோக்கியமா செஞ்சு கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க. இப்போ குழந்தைகளுக்கு ரொம்ப புடிச்ச இந்த சூப்பரான நேந்திரம் பழம் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்க போறோம். இந்த ரெசிபி செய்றதுக்கு நீங்க எந்த வாழைப்பழம் வேணும்னாலும் எடுத்துக்கலாம் ஆனா நேந்திர பழம்ல செஞ்சா டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும் அதே நேரத்தில் குழந்தைகளுக்கு ரொம்ப ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
வாழைப்பழம் டெய்லி ஒன்னு சாப்பிட்டு வந்தால் அதுல இருக்கிற நார்ச்சத்துக்கள் நம்ம உடம்புக்கு ரொம்பவே நல்லது அதனால தினமும் கூட ஒரு வாழைப்பழம் நம்ம சாப்பிடணும் அந்த வகையில் குழந்தைங்க வாழைப்பழம் சாப்பிடல அப்படின்னா இந்த மாதிரி ஒரு தடவை ரொம்ப கம்மியான பொருட்கள் வச்சு சூப்பர் டேஸ்டான ஹெல்த்தியான ஸ்நாக்ஸ் மாதிரி செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
இத நம்ப ரூஸ்ட் பண்ணி எடுக்கிறதால லைட்டா கிரிஸ்பாவும் அதே நேரத்துல சாப்பிடுவதற்கு ரொம்பவே சாஃப்டா ஜூஸியாகவும் இருக்கும். இவ்ளோ ஹெல்த்தியான இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு வெறும் நாலு பொருள் மட்டும் போதும். நாலு பொருள் வச்சு செய்யக்கூடிய இந்த ஸ்நாக்ஸ் கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடப்படும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான நேந்திர பழ ரோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
நேந்திரம் வாழைப்பழம் ரோஸ்ட் | Nendram Roast In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 நேந்திர வாழைப்பழம்
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- 1/2 ஏலக்காய் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை
செய்முறை
- முதலில் நேந்திரம் பழத்தை வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- ஒரு கடாயில்நெய் ஊற்றி அதில் வெட்டி வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக ரோஸ்ட்செய்து கொள்ளவும்.
- அதன் பிறகு அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து நன்றாக உருகி வாழைப்பழத்தில் ஒன்றாக சேரும் வரைரோஸ்ட் செய்து கொள்ளவும்
- இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான நேந்திரம் பழம் ரோஸ்ட் தயார்