கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றைவிட உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு என்றால் அது மீன் வகைகள் தான். மீன்களில் உடம்பிற்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. எனவே சிறுவயது முதலே குழந்தைகளுக்கு மீன் சாப்பிடக் கொடுத்து பழக்குவது மிகவும் நல்ல விஷயமாகும்.
மீன்களை வறுப்பதை விட, குழம்பில் சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும். அவ்வாறு மினி சுறா மீன் கிரேவி வைப்பது இந்த முறையில் செய்து பாருங்கள். சுறா மீன் கொழுப்பே இல்லாதது. குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா மீன் கிரேவி செய்து சாப்பிட்டால், தாய் பால் சுரக்கும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பலரது வீட்டிலும் மீன் குழம்பு தான்.
ஆனால் எப்பொழுதும் புளிக்கரைசல், மிளகாய் தூள் போட்டு ஒரே விதமான மீன் குழம்பை தான் பலரும் செய்கின்றனர். ஆனால் ஒரு முறை இப்படி மினி சுறா மீன் கிரேவி செய்து பாருங்கள். இதன் சுவை மிகவும் அசத்தலாக, அமோகமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோ
மினி சுறா மீன் கிரேவி | Mini Shark Gish Gravy Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 5 சுறா மீன் துண்டுகள்
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
- 1/2 தேக்கரண்டி மல்லி தூள்
- 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
- 1/2 தேக்கரண்டி சீரகத் தூள்
- 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 தேக்கரண்டி அரைத்த தேங்காய் விழுது
- எண்ணெய் தேவையானஅளவு
- உப்பு தேவையானஅளவு
செய்முறை
- வெங்காயம்,தக்காளி, இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும்.
- மீனை சுத்தம் செய்து அதில் உப்பு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து முறுகாமல் அரை பாகம் வேகும் அளவிற்கு பொரித்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் அதில் தூள் வகைகள், உப்பு தேங்காய் விழுது, அரை கப் தண்ணீர் சேர்த்து பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு ஒரு மூடி போட்டு கொதிக்க விடவும் மசாலா வாசம் போனதும் இறக்கவும்.
- சுவையான மினி சுறா மீன் கிரேவி தயார்.