சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட ருசியான முடக்கத்தான் கீரை ரசம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

நம்முடைய சமையலறையில் தினமும் வைக்கக்கூடியது ரசம். குழம்பை கூட சில பேர் சுவையாக வைத்து விடுவார்கள். தென்னிந்தியாவில் எந்த விருந்து ரசம் இல்லாமல் நிறைவடைவது இல்லை. மிகவும் எளிமையான உணவு வகையாகவும் ரசம் கருதப்படுகிறது. ரசம் செய்வது மிகவும் எளிமையானது. மிளகு ரசம், புளி ரசம், இஞ்சி ரச

By Prem Kumar · 7/12/2023

நம்முடைய சமையலறையில் தினமும் வைக்கக்கூடியது ரசம். குழம்பை கூட சில பேர் சுவையாக வைத்து விடுவார்கள். தென்னிந்தியாவில் எந்த விருந்து ரசம் இல்லாமல் நிறைவடைவது இல்லை. மிகவும் எளிமையான உணவு வகையாகவும் ரசம் கருதப்படுகிறது. ரசம் செய்வது மிகவும் எளிமையானது. மிளகு ரசம், புளி ரசம், இஞ்சி ரசம், தக்காளி ரசம் என ரசத்தில் பல வகையில் உள்ளன. அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது முடக்கத்தான் கீரை ரசம். இயற்கையாகவே காடுகளில் கிடைக்கும் மிகவும் முக்கியமான மூலிகை வகைகளில் ஒன்று தான் இந்த முடக்கத்தான் கீரை.

இந்த முடக்கத்தான் கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. நம் முன்னோர்கள் காலம் காலமாக பல்வேறு நோய்களுக்கு சிறந்த தீர்வாக இந்த முடக்கத்தானை பயன்படுத்தியுள்ளனர். முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடியாக படர்ந்து இருக்கும் ,இது மாதவிடாய் வலியைப் போக்க வல்லது. மேலும் இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. வாத நோய், மூட்டு வலி போன்றவற்றை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை இந்த முடக்கத்தானுக்கு உண்டு. இந்த முடக்கத்தான் கீரையை துவையல், சூப் , பொரியல், அரிசி கூழ், ரசம் என பல்வேறு வகைகளில் நாம் வீடுகளில் செய்த உண்ணலாம்.

மூட்டு வலி, பக்கவாதம் உள்ளவர்கள் வாரம் ஒரு முறையேனும் உணவிலோ அல்லது தனியாக மருந்து என்ற வகையிலோ இந்த முடக்கத்தானை எடுத்துக் கொண்டால் சிறந்த நிவாரணத்தை தரும். அதேபோல் உடலுகுக்கு தேவையான பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்றவற்றை இந்த முடக்கத்தான் கீரை சமநிலையில் வைத்துக் கொள்கிறது. இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும். கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை, பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பில்லாமல், சுவையாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : மழைக்காலத்தில், தொண்டைக்கு இதமா ருசியான இடிச்சு வச்ச நாட்டு கோழி ரசம் இப்படி செய்து பாருங்களேன்!

Recipes AMP · Quick view
View full