நம்முடைய சமையலறையில் தினமும் வைக்கக்கூடியது ரசம். குழம்பை கூட சில பேர் சுவையாக வைத்து விடுவார்கள். தென்னிந்தியாவில் எந்த விருந்து ரசம் இல்லாமல் நிறைவடைவது இல்லை. மிகவும் எளிமையான உணவு வகையாகவும் ரசம் கருதப்படுகிறது. ரசம் செய்வது மிகவும் எளிமையானது. மிளகு ரசம், புளி ரசம், இஞ்சி ரசம், தக்காளி ரசம் என ரசத்தில் பல வகையில் உள்ளன. அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது முடக்கத்தான் கீரை ரசம். இயற்கையாகவே காடுகளில் கிடைக்கும் மிகவும் முக்கியமான மூலிகை வகைகளில் ஒன்று தான் இந்த முடக்கத்தான் கீரை.
இந்த முடக்கத்தான் கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. நம் முன்னோர்கள் காலம் காலமாக பல்வேறு நோய்களுக்கு சிறந்த தீர்வாக இந்த முடக்கத்தானை பயன்படுத்தியுள்ளனர். முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடியாக படர்ந்து இருக்கும் ,இது மாதவிடாய் வலியைப் போக்க வல்லது. மேலும் இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. வாத நோய், மூட்டு வலி போன்றவற்றை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை இந்த முடக்கத்தானுக்கு உண்டு. இந்த முடக்கத்தான் கீரையை துவையல், சூப் , பொரியல், அரிசி கூழ், ரசம் என பல்வேறு வகைகளில் நாம் வீடுகளில் செய்த உண்ணலாம்.
மூட்டு வலி, பக்கவாதம் உள்ளவர்கள் வாரம் ஒரு முறையேனும் உணவிலோ அல்லது தனியாக மருந்து என்ற வகையிலோ இந்த முடக்கத்தானை எடுத்துக் கொண்டால் சிறந்த நிவாரணத்தை தரும். அதேபோல் உடலுகுக்கு தேவையான பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்றவற்றை இந்த முடக்கத்தான் கீரை சமநிலையில் வைத்துக் கொள்கிறது. இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும். கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை, பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பில்லாமல், சுவையாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
முடக்கத்தான் கீரை ரசம் | Mudakkathan Keerai Rasam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் முடக்கத்தான் கீரை
- 2 தக்காளி
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- 6 பல் பூண்டு
- புளி எலுமிச்சை அளவு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி தழை சிறிதளவு
- கடலை எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் கீரையை நன்றாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தக்காளியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பின் மிளகு மற்றும் சீரகத்தை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பருப்பை நன்கு கழுவி விட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குக்கரில் சேர்த்து 5 விசில் வரை விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் அரைத்த மிளகு, சீரகம் சேர்த்து லேசாக கிளறவும். அதன்பிறகு அரைத்த தக்காளி மற்றும் கீரை விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- பின் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- ரசம் கொதித்ததும், வேக வைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர், மல்லித்தழை சேர்த்து நுரைகட்டி வரும்போது அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான, கசப்பிலாத முடக்கத்தான் கீரை ரசம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மழைக்காலத்தில், தொண்டைக்கு இதமா ருசியான இடிச்சு வச்ச நாட்டு கோழி ரசம் இப்படி செய்து பாருங்களேன்!