- Advertisement -
முருங்கைகீரையும்,சுண்டைக்காயை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரும். முருங்கைக்கீரையுடன் சுண்டைக்காயில் இருக்கும் துவர்ப்புத் தன்மை நீங்க, அதை எப்படி வறுவல் செய்வது என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
-விளம்பரம்-
நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால், சாதாரண தலைவலி, இருமல் ஏற்படும் போது முருங்கைக்கீரையில் செய்த சூப் சாப்பிட்டால் அவை பறந்து போகும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரும்பு சத்து அதிகரிக்கும். ரத்த சோகை நீங்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு, அதிகமாக பால் சுரக்கும். சரி, குறிப்பை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
- Advertisement -
இந்த முருங்கைக்கீரை சுண்டைக்காயை நாம் சாப்பிடுவதால் குடலில் இருக்கும் புழு வெளியேற்றப்படுகிறது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் | MuraigaiKeerai Sudaikai varuval
முருங்கைகீரையும்,சுண்டைக்காயை எப்படி சமைத்துசாப்பிட்டாலும் அது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரும். முருங்கைக்கீரையுடன் சுண்டைக்காயில்இருக்கும் துவர்ப்புத் தன்மை நீங்க, அதை எப்படி வறுவல் செய்வது என்பதை பற்றி தான் இன்றுநாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால்,சாதாரண தலைவலி, இருமல் ஏற்படும் போது முருங்கைக்கீரையில் செய்த சூப் சாப்பிட்டால் அவைபறந்து போகும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரும்பு சத்து அதிகரிக்கும். ரத்தசோகை நீங்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு, அதிகமாக பால்சுரக்கும். சரி, குறிப்பை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Yield: 4
Calories: 184kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 5 கப் முருங்கைக்கீரை
- 1 கப் சுண்டைக்காய்
- 100 கிராம் சின்ன வெங்காயம்
- 1/2 கப் தேங்காய்த் துருவல்
- 2 மிளகாய் வற்றல்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- கீரையைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சுண்டைக்காயைப் பாதியாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம்சேர்த்து வதக்கி, சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.
- பிறகு கீரையைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் தேங்காய்த் துருவல் சேர்த்துக்கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- சுவையான முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் தயார்.
Nutrition
Serving: 520g | Calories: 184kcal | Carbohydrates: 8g | Protein: 11g | Fat: 1g | Saturated Fat: 0.8g | Cholesterol: 2mg | Potassium: 214mg | Fiber: 6g | Vitamin A: 8IU | Iron: 4mg