முருங்கைப்பூ கிடைச்சா ஒரு தடவை இந்த முருங்கைப்பூ முட்டை பொரியல் செஞ்சு பாருங்க!

- Advertisement -

எல்லாரும் முருங்கைக்கீரை பொரியல் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் முருங்கைக்காய் கூட்டு, மசாலா  முருங்கைக்காய், முருங்கைக்கீரை சூப், முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்காய் புளி கூட்டு அப்படின்னு கீரையும் காயையும் வச்சு நம்ம நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இதுவரைக்கும் நம்ம முருங்கைப்பூ வச்சு எதுவுமே செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம் கீரையோடு அதை சேர்த்து வைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனா இந்த முருங்கைப்பூ நம்ம சாப்பிடுறதால நம்ம உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். முருங்கைப்பூ நம்ம கண்ணுல வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும். நரம்புத் தளர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கும்.

-விளம்பரம்-

ஆனா இந்த முருங்கை பூவை சாப்பிட கொடுத்தா குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் யாருமே சாப்பிட மாட்டாங்க அதே இந்த முருங்கைப்பூ வச்சு கொஞ்சம் டிஃபரண்டா முட்டை பொரியல் செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. டிஃபரென்ட் ஆகவும் இருக்கும் அதே நேரத்தில் சாப்பிடுவதற்கு ரொம்ப டேஸ்ட்டா சூப்பராவே இருக்கும். முருங்கை பூ இருந்த இடமே தெரியாது அந்த அளவுக்கு முட்டையோட சேர்ந்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

- Advertisement -

இந்த முருங்கை பூவே சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம் இல்ல அப்படின்னா புளி குழம்பு கார குழம்பு பருப்புனு வச்சு அதுக்கு சைடிஷாவும் இந்த முருங்கை பூ முட்டை பொரியல் வைத்து சாப்பிடலாம் காம்பினேஷன் ரொம்ப சூப்பரா அட்டகாசமாக இருக்கும். ரொம்ப சிம்பிளா அதே நேரத்தில் ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கக்கூடிய இந்த முருங்கைப்பூ முட்டை பொரியல் ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு பாருங்க அப்பதான் இதோட ஆரோக்கியமும் இதுல இருக்க சத்துக்களும் உங்களுக்கு தெரியும். இப்ப வாங்க இந்த சூப்பரான முருங்கைப்பூ முட்டை பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

முருங்கைப்பூ முட்டை பொரியல் | Murugai Poo Egg Poriyal

முருங்கை பூவே சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம் இல்ல அப்படின்னா புளி குழம்பு கார குழம்புபருப்புனு வச்சு அதுக்கு சைடிஷாவும் இந்த முருங்கை பூ முட்டை பொரியல் வைத்து சாப்பிடலாம்காம்பினேஷன் ரொம்ப சூப்பரா அட்டகாசமாக இருக்கும். ரொம்ப சிம்பிளா அதே நேரத்தில் ரொம்பவேஆரோக்கியமானதா இருக்கக்கூடிய இந்த முருங்கைப்பூ முட்டை பொரியல் ஒரு தடவ உங்க வீட்லசெஞ்சு பாருங்க அப்பதான் இதோட ஆரோக்கியமும் இதுல இருக்க சத்துக்களும் உங்களுக்கு தெரியும்.இப்ப வாங்க இந்த சூப்பரான முருங்கைப்பூ முட்டை பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Muraigai poo egg poriyal
Yield: 3
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கைப்பிடி முருங்கைப்பூ
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 முட்டை
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முருங்கைபூவை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய இஞ்சி அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கிய பிறகு முருங்கை பூவையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • முருங்கைப்பூ ஒரு பத்து நிமிடங்கள் நன்றாக வதங்கிய பிறகு அதனை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு முட்டையைஉடைத்து சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இப்பொழுது அனைத்தையும் சேர்த்து கலந்து மிளகுத்தூள் தேங்காய் துருவல் கொத்தமல்லி இலைகள் போட்டு நன்றாக கிளறி இறக்கினால் சுவையான முருங்கை பூ முட்டை பொரியல் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 199g | Protein: 12g | Sodium: 206mg | Potassium: 123.2mg | Vitamin A: 13IU | Calcium: 8mg