- Advertisement -
முருகைக்காய், மற்றும் முருகைகீரை எல்லோருக்கும் பிடிக்கும் அந்த வகையில் முற்றுகைக்காய் தொக்கு தான் இன்று பார்க்க போகிறோம். முருகைக்காயில் இரும்பு சத்து அதிகம் நிறைந்து உள்ளது மற்றும் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது அதனால் வாரத்தில் ஒரு முறையாவதும் உணவில் முருகைக்காய் சேர்த்து கொள்ளவும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : முருங்கைக்காய் மசாலா கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!
- Advertisement -
இந்த முருகைக்காய் தொக்கு செஞ்சி சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
முருகைக்காய் தொக்கு | Murugaikai Thokku Recipe In Tamil
முருகைக்காய், மற்றும் முருகைகீரை எல்லோருக்கும் பிடிக்கும் அந்த வகையில் முற்றுகைக்காய் தொக்கு தான் இன்று பார்க்க போகிறோம். முருகைக்காயில் இரும்பு சத்து அதிகம் நிறைந்து உள்ளது மற்றும் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது அதனால் வாரத்தில் ஒரு முறையாவதும் உணவில் முருகைக்காய் சேர்த்து கொள்ளவும். இந்த முருகைக்காய் தொக்கு செஞ்சி சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Calories: 110kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 5 முருகைக்காய்
- ½ டீஸ்பூன் கடுகு
- 1 வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
- 1 தக்காளி நறுக்கியது
- கருவேப்பிலை கொஞ்சம்
- குழம்பு மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
- உப்பு தேவையானவை
- 1 டீஸ்பூன் சோம்பு பொடி
- 5 பல் பூண்டு
- 2 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
- முதலில் முருகைக்காவை கீத்தி உள்ள இருக்கும் விதைகளை மட்டும் எடுத்து வைத்துக்கொள்ளவும். முத்தலாக இருந்தால் போட வேண்டாம்.
- அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும் பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் எடுத்து வைத்துள்ள முருகைக்காய் விதைகளை சேர்த்து அத்துடன் கருவேப்பிலை இலைகளையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- பிறகு அத்துடன் குழம்பு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
- வெந்ததும் சோம்பு பொடி மற்றும் பூண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
Nutrition
Serving: 300G | Calories: 110kcal | Protein: 3g | Saturated Fat: 0.5g | Cholesterol: 0.1mg | Sugar: 0.4g | Iron: 5mg