இட்லி, தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த முருங்கை கீரை கார சட்னி இப்படி செய்து பாருங்கள் இரண்டு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் மிகவும் பிரபலமான உணவுகளாக உள்ளன. இந்த அற்புத உணவுகளுடன் சுவையான சாம்பார், சட்னிகளை சேர்த்து ருசித்தால் அருமையாக இருக்கும். குறிப்பாக, தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகள் ரொம்பவே டெஸ்டியாக இருக்கும். ஆனால், இந்த சட்னிகள் நம்முட

By Prem Kumar · 18/10/2024

தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் மிகவும் பிரபலமான உணவுகளாக உள்ளன. இந்த அற்புத உணவுகளுடன் சுவையான சாம்பார், சட்னிகளை சேர்த்து ருசித்தால் அருமையாக இருக்கும். குறிப்பாக, தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகள் ரொம்பவே டெஸ்டியாக இருக்கும். ஆனால், இந்த சட்னிகள் நம்முடைய வீடுகளில் அடிக்கடி தயார் செய்யப்படுவையாக உள்ளன. இவற்றுக்கு மாற்றாக நீங்கள் ஒரு சட்னியை முயற்சிக்க வேண்டுமானால், இந்த ஹெல்த்தி சட்னியான முருங்கைக்கீரை சட்னியை முயற்சிக்கலாம்.

இவற்றை தாயார் செய்வது மிகவும் எளிமையான ஒன்றாகும். அதுவும் 5 நிமிடத்திலே அசத்தலாக செய்து விடலாம். தற்போதுள்ள காலகட்டத்திற்கு ஆரோக்கியமான உணவுகளையே நாம் பெரும்பாலும் சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கபடுகிறது. அதற்கு முக்கிய காரணம் தற்போதுள்ள உணவு பழக்க முறைகளே. எனவே தற்போதெல்லாம் நாம் ஆரோக்கியமான உணவுகளையே தேடி உண்ணுகிறோம். அப்படி ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் ஒன்றுதான் ‘முருங்கை’.

முருங்கை மரத்தை பொறுத்த வரை அதன் அனைத்து பகுதிகளும் நமக்கு சத்து நிறைந்ததாகவும், ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாகவும் உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இரும்புச்சத்து பற்றாக்குறையை சரிசெய்ய உதவும் ‘முருங்கை கீரை’ தான். இரும்புச்சத்து நிறைந்த இந்த முருங்கை கீரையை வைத்து எவ்வாறு இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட சுவையான சட்னி செய்யலாம் என்று தான். இந்த முருங்கைக்கீரை சட்னியானது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும். மேலும் இது சத்தானதும் கூட. குழந்தைகளும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : சத்தான சிறுதானிய முருங்கை கீரை அடை இப்படி செய்து பாருங்கள் இரண்டு அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

Recipes AMP · Quick view
View full