தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் மிகவும் பிரபலமான உணவுகளாக உள்ளன. இந்த அற்புத உணவுகளுடன் சுவையான சாம்பார், சட்னிகளை சேர்த்து ருசித்தால் அருமையாக இருக்கும். குறிப்பாக, தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகள் ரொம்பவே டெஸ்டியாக இருக்கும். ஆனால், இந்த சட்னிகள் நம்முடைய வீடுகளில் அடிக்கடி தயார் செய்யப்படுவையாக உள்ளன. இவற்றுக்கு மாற்றாக நீங்கள் ஒரு சட்னியை முயற்சிக்க வேண்டுமானால், இந்த ஹெல்த்தி சட்னியான முருங்கைக்கீரை சட்னியை முயற்சிக்கலாம்.
இவற்றை தாயார் செய்வது மிகவும் எளிமையான ஒன்றாகும். அதுவும் 5 நிமிடத்திலே அசத்தலாக செய்து விடலாம். தற்போதுள்ள காலகட்டத்திற்கு ஆரோக்கியமான உணவுகளையே நாம் பெரும்பாலும் சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கபடுகிறது. அதற்கு முக்கிய காரணம் தற்போதுள்ள உணவு பழக்க முறைகளே. எனவே தற்போதெல்லாம் நாம் ஆரோக்கியமான உணவுகளையே தேடி உண்ணுகிறோம். அப்படி ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் ஒன்றுதான் ‘முருங்கை’.
முருங்கை மரத்தை பொறுத்த வரை அதன் அனைத்து பகுதிகளும் நமக்கு சத்து நிறைந்ததாகவும், ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாகவும் உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இரும்புச்சத்து பற்றாக்குறையை சரிசெய்ய உதவும் ‘முருங்கை கீரை’ தான். இரும்புச்சத்து நிறைந்த இந்த முருங்கை கீரையை வைத்து எவ்வாறு இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட சுவையான சட்னி செய்யலாம் என்று தான். இந்த முருங்கைக்கீரை சட்னியானது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும். மேலும் இது சத்தானதும் கூட. குழந்தைகளும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
முருங்கை கீரை கார சட்னி | Murungai Keerai Chutney Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் முருங்கை கீரை
- 10 வர மிளகாய்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1 துண்டு புளி
- 5 பல் பூண்டு
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- நல்லெண்ணெய் ் தேவையான அளவு
- 2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
செய்முறை
- முதலில் முருங்கை கீரை நன்கு சுத்தம் செய்து விட்டு தண்ணீரில் அலசி விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முருங்கை கீரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் உளுந்து, மிளகாய், பூண்டு, புளி, பெருங்காய தூள் சேர்த்து வதக்கி எடுத்து கொள்ளவும்.
- பின் இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து ஒரு பவுளுக்கு மாற்றி கொள்ளவும்.
- ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை சட்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சத்தான சிறுதானிய முருங்கை கீரை அடை இப்படி செய்து பாருங்கள் இரண்டு அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!