முருங்கைக்கீரை பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

முருங்கைக்கீரை உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, முருங்கைக்காய் இது எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. நம் உடம்பில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை இயற்கையான முறையில் சரி செய்ய இந்த முருங்கைக்கீரை ரொம்பவே உதவியாக இரு

By Prem Kumar · 11/7/2025

முருங்கைக்கீரை உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, முருங்கைக்காய் இது எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. நம் உடம்பில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை இயற்கையான முறையில் சரி செய்ய இந்த முருங்கைக்கீரை ரொம்பவே உதவியாக இருக்கும். உடம்புல ரத்தம் கம்மியா இருக்கிறவங்க அடிக்கடி முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தம் அதிகரிக்கும். மேலும் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் மருத்துவ குணங்கள் இதுல நிறைந்திருக்கு.

பொதுவா முருங்கை கீரை வச்ச சாம்பார் முருங்கைக்கீரை, பருப்பு கூட்டு, முருங்கைக்கீரை சூப், முருங்கைக்கீரை பொரியல் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பாங்க. அந்த வகையில முருங்கைக்கீரை வச்சு இன்னைக்கு நம்ம பக்கோடா செய்ய போறோம். ஒரு சிலருக்கு முருங்கைக்கீரை வைத்து செய்யக்கூடிய எந்த ரெசிபியுமே பிடிக்காது. அந்த மாதிரி சுத்தமா பிடிக்காதவங்களுக்கு இப்படி ஒரு முருங்கைக் கீரை பக்கோடா செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

குழந்தைகள் கீரை வகைகள் சாப்பிடாமல் அடம் பிடிப்பாங்க அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான பக்கோடா ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க. இந்த பக்கோடா ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இந்த முருங்கைக்கீரை பக்கோடா ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. ஈவினிங் டைம்ல டீ காபியோட இந்த முருங்கைக்கீரை பக்கோடா கொடுத்தீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. முக்கியமா கீரையை பிடிக்காதவங்க கூட இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடு வாங்க.

வெங்காய பக்கோடா, கடலை மாவு பக்கோடா பீட்ரூட் பக்கோடா அப்படின்னு நிறைய விதமான பக்கோடா ரெசிப்பீஸ் செஞ்சிருப்பீங்க ஆனா முருங்கைக்கீரை வச்சு கண்டிப்பா இந்த ரெசிபிய செஞ்சே இருக்க மாட்டீங்க. கண்டிப்பா முருங்கைக்கீரை வச்சு இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்தப் பக்கோடா செய்வதற்கு ரெண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை இருந்தாலே போதுமானது. சட்டுனு பத்தே நிமிஷத்துல இதை செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான முருங்கைக்கீரை பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முருங்கைக்கீரை நூடுல்ஸ் இந்த மாதிரி ஆரோக்கியமா செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full