- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் அப்படினா ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ கடைகளில் இருக்கக்கூடிய நூடுல்ஸ் வாங்கி அடிக்கடி செஞ்சு கொடுக்கிறதால குழந்தைகளுக்கு என்னென்ன பிரச்சனை வரும் அப்படின்னா நமக்கே தெரியும். அதனால குழந்தைகள் நூடுல்ஸ் கேட்டாங்கன்னா முடிஞ்ச வரைக்கும் அது தவிர்த்து அதுக்கு பதிலா வேற என்ன செய்யணும் அப்படின்னு யோசிக்கலாம். அப்படி நீங்க யோசிச்சிட்டு இருந்தீங்கன்னா இந்த ஹெல்தியான கோதுமை மாவுல செஞ்ச நூடுல்ஸ் செஞ்சு குடுங்க. அதுலயும் முருங்கைக் கீரை சாறு சேர்த்து செய்ற இந்த நூடுல்ஸ் நிறைய ஆரோக்கியமானது.
முருங்கைக்கீரையில் நிறைய நிறைய சத்துக்கள் இருக்கு. ரத்தசோகை பிரச்சனை இருக்கவங்க உடம்புல ஹீமோகுளோபின் கம்மியா இருக்கிறவங்க எல்லாரும் முருங்கைக்கீரை சாப்பிடுவதால் பிரச்சனை எல்லாமே சரியாகிடும். குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை கொடுத்தால் கண்டிப்பா சாப்பிட மாட்டாங்க. அதனால அவங்களுக்கு முருங்கை கீரை சாறு எடுத்து இந்த மாதிரி நூடுல்ஸ் தெரிஞ்சுக்கோங்க கண்டிப்பா நூடுல்ஸ்னு சாப்பிட்டு முடிச்சிடுவாங்க.
குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸுக்கு செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா லஞ்ச் பாக்ஸ் காலியாகி தான் வீட்டுக்கு வரும். இனிமேல் குழந்தைகள் முருங்கைக்கீரை சாப்பிட மாட்டேன் அப்படின்னா அடம் பிடிச்சாங்கன்னா அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு கொடுங்க. விரும்பி சாப்பிடுவாங்க இப்ப வாங்க இந்த சுவையான முருங்கைக்கீரை நூடுல்ஸ் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பன்னீர் நூடுல்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! இரவு டிபனுக்கு பக்காவாக இருக்கும்!
Ingredients
Method
முருங்கைக் கீரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவில் உப்பு முருங்கை கீரை சாறு சேர்த்து நன்றாக டிசைன் சப்பாத்தி மாவு போல் தேய்த்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.






