- Advertisement -
வீதி எங்கும் காணப்படும் முருங்கை மரம் அதில் இருக்கும் காய், மற்றும் இலைகள் நம் உணவுகளோடு பயன்படுத்தப்படுகிறது. முருங்கை மரத்தின் காய், சாம்பாரில் சேர்க்கப்படுகிறது. அதன் இலைகள் பொரியல் செய்யப்படுகின்றன. வேறு எந்த பழங்கள், காய்கறிகளில் இல்லாத அளவிற்கு ஊட்டச்சத்து நன்மைகள் இந்த முருங்கை கீரையில்
-விளம்பரம்-
உள்ளது. அதனால் வாரம் ஒரு முறையாவதும் உணவுகளில் சேர்த்துக்கொண்டால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
முருங்கைக்கீரை பொரியல் | Murungai Keerai Poriyal Recipe In Tamil
வீதி எங்கும் காணப்படும் முருங்கை மரம் அதில் இருக்கும் காய், மற்றும் இலைகள் நம் உணவுகளோடு பயன்படுத்தப்படுகிறது. முருங்கை மரத்தின் காய், சாம்பாரில் சேர்க்கப்படுகிறது. அதன் இலைகள் பொரியல் செய்யப்படுகின்றன. வேறு எந்த பழங்கள், காய்கறிகளில் இல்லாத அளவிற்கு ஊட்டச்சத்து நன்மைகள் இந்த முருங்கை கீரையில் உள்ளது. அதனால் வாரம் ஒரு முறையாவதும் உணவுகளில் சேர்த்துக்கொண்டால் மிகவும் ஆரோக்கியமானது.இந்த பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- முருங்கைக்கீரை தேவையான அளவு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 2 வர மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் கடுகு
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- உப்பு தேவையான அளவு
- ½ கப் தேங்காய் துருவல்
செய்முறை
- முதலில் முருங்கைக்கீரையை ஆய்ந்து கழுவி சுத்தம் படுத்திக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஆய்ந்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் கடைசியாக அதன் மேல் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ருசியான மணத்தக்காளி கீரை சட்னி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!