உங்கள் வீட்டில் முருங்கைக்காய் அதிகமாக இருக்க? அப்போ சட்டுனு இது போன்று முருங்கைக்காய் சுக்கா செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க சும்மா அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும்
-விளம்பரம்-
லன்ச்க்கு இதை சேர்த்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த முருங்கைக்காய் சுக்கா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
முருங்கைக்காய் சுக்கா | Murungaikai Sukka Recipe In Tamil
உங்கள் வீட்டில் முருங்கைக்காய் அதிகமாக இருக்க? அப்போ சட்டுனு இது போன்று முருங்கைக்காய் சுக்கா செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க சும்மா அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் லன்ச்க்கு இதை சேர்த்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.இந்த முருங்கைக்காய் சுக்கா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 5 முருங்கைக்காய் நறுக்கியது
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 தக்காளி நறுக்கியது
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 மூடி துருவிய தேங்காய்
- 1 டீஸ்பூன் கடுகு
- மஞ்சள் தூள் கொஞ்சம்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் மல்லி தூள்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் முருங்கைக்காய் நறுக்கி தண்ணீரில் அலசி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து தேங்காய் துருவலை மிக்சியில் சேர்த்து அரைத்து அதன் பாலை மட்டும் எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி குலைய வதங்கியதும் எடுத்துவைத்துல தேங்காய் பாலை இதில் ஊற்றி அத்துடன் நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து கலந்து மூடி போட்டு வேக விடவும்.
- முருங்கைக்காய் வெந்து கிரேவி பதம் வரம் வரை சுண்ட வைக்கவும். பிறகு பரிமாறவும்.
இதையும் படியுங்கள் : முருங்கைக்காய் மசாலா கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!