Advertisement
சைவம்

காரசாரமான ருசியில் காளான் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!

Advertisement

நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான். காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் இரும்பு மற்றும் செம்பு சத்துக்களையும் அதிகம் கொண்டது. காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள், காளான் உடலுக்கும் நல்ல மருத்துவ பயனளிக்கிறது, குழந்தைகள் விரும்பும் விதத்திலும், சுவையிலும் சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது. அதேபோல் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் அசைவ உணவுகளுக்கு நிகராகவும் இருக்கும். காளான் வைத்து சுவையான மசாலா, கிரேவி, 65, மஞ்சூரியன் என்று பல விதங்களில் சேமித்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் காளான் வைத்து மிளகு பிரட்டல் ரெசிபியை காண உள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த காளான் மிளகு பிரட்டல் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் சப்பாத்தி மட்டும் இல்லாமல் சாதத்துக்கு மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அற்புதமாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

காளான் மிளகு பிரட்டல் | Mushroom Milagu Pirattal Recipe In Tamil

Advertisement
2000/svg" width="0" height="0" style="display:block;width:0px;height:0px">
Print Recipe
நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான். காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் இரும்பு மற்றும் செம்பு சத்துக்களையும் அதிகம் கொண்டது. காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. சிலருக்கு அசைவ
Advertisement
உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். காளான் வைத்து சுவையான மசாலா, கிரேவி, 65, மஞ்சூரியன் என்று பல விதங்களில் சேமித்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் காளான் வைத்து மிளகு பிரட்டல் ரெசிபியை காண உள்ளோம்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Mushroom Milagu Pirattal
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 51

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

Ingredients

  • 1 பாக்கெட் காளான்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சோம்பு தூள்
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 3 வர ‌மிளகாய்
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • முதலில் காளானை சுத்தம் செய்து, நறுக்கி சூடான தண்ணீரில் போட்டு பின் தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம், தக்காளி வதங்கியதும் சோம்பு தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து கலந்து உப்பு சேர்த்து மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விடவும்.
  • பின் மிளகு தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான காளான் மிளகு பிரட்டல் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 51kcal | Carbohydrates: 2.6g | Protein: 5.2g | Fat: 2g | Sodium: 6mg | Potassium: 448mg | Fiber: 2.7g | Vitamin C: 5.29mg | Calcium: 18mg | Iron: 9.1mg

இதனையும் படியுங்கள் : காளான் தொக்கு இப்படி செய்து பாருங்க!

Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

4 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

14 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

20 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

23 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

24 மணி நேரங்கள் ago