சூப் குடிச்சா நம்ம உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியம் அப்படின்னு சொல்லுவாங்க ஆமாங்க அது உண்மைதான் நம்மளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தரக்கூடிய ஒரு திறன் இந்த சூப்புக்கு இருக்கு. நம்ம எந்த வகையான சூப் குடிச்சாலும் நம்ம உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா தான் இருக்கும். சைவ சூப்ல எக்கச்சக்கமான சூப் வகைகள் இருக்கு அதே மாதிரி அசைவ சூப் லயும் எக்கச்சக்கமான அசைவ சூப் வகைகள் இருக்கு.
பார்லி சூப் காய்கறி சூப் கீரை சூப் மக்காச்சோள சூப் அப்படின்னு சைவத்துல நிறைய சூப் வகைகள் இருக்கு. அதே மாதிரி அசைவத்தையும் சிக்கன் சூப் மட்டன் சூப் நண்டு சூப் அப்படின்னு நிறைய சூப் வகைகள் இருக்கு. ஆனா இன்னைக்கு நம்ம ரொம்பவே ஈஸியா செய்யக்கூடிய ஒரு ஈஸி மஸ்ரூம் சூப் தான் பார்க்க போறோம். இந்த மஸ்ரூம் சோப் நம்பர் இருமல் இருக்கும் போது குடிச்சா இருமல் சீக்கிரத்திலேயே சரியாகிவிடும்.
அதுமட்டுமில்லாம உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியதும் கூட. ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு செய்யக்கூடிய இந்த ஈசி மஸ்ரூம் சூப்பர் நம்ம குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி குடிப்பாங்க அவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே இந்த மாதிரியான சூப் வகைகள் கொடுத்து பழகினால் அவங்க பெரியவங்களா வளரும் போது அவங்க உடம்புல நிறைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அதனால டீ, காபி கொடுக்குறத நிறுத்திட்டு இந்த மாதிரியான சூப் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் பெரியவங்களுக்கும் நம்ம இந்த மாதிரியான சூப் வகைகள் கொடுக்கும் போது அவங்க ரொம்பவே சுறுசுறுப்பாக இருப்பார்கள். இப்ப வாங்க இந்த சூப்பரான ஈஸியான மஷ்ரூம் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மஸ்ரூம் சூப் | Mushroom Soup Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 15 மஸ்ரூம்
- 10 பல் பூண்டு
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 துண்டு பட்டை
- 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
- கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் மஸ்ரூம்ஐ நன்கு கழுவி சுத்தம் செய்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தி ல்நெய் விட்டு அதில் பட்டை சேர்த்து தாளித்து கொள்ளவும. பிறகு பூண்டை தோல் உரித்து பொடிபொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்
- பிறகு வெட்டிவைத்துள்ள மஸ்ரூம் ஐ சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். பிறகு மஷ்ரூம் வெந்ததும் மிளகுதூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- மிளகு தூள் சேர்த்த பிறகு ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான ஈஸியான மஷ்ரூம் சூப் தயார்.