கமகமக்கும் ஆரோக்கியமான சுவையான காளான் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!

சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள், காளான் உடலுக்கும் நல்ல மருத்துவ பயனளிக்கிறது, அதேபோல் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் அசைவ உணவுகளுக்கு ந

By Prem Kumar · 5/4/2026

சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள், காளான் உடலுக்கும் நல்ல மருத்துவ பயனளிக்கிறது, அதேபோல் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் அசைவ உணவுகளுக்கு நிகராகவும் இருக்கும். தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம்,வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை, மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே தோசை வகையை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கலாம் ஆகவே சற்று வித்தியாசமான முறையில் இந்த காளான் ஊத்தப்பம் செய்து பார்க்கலாமே!

1 கப் அரிசி இருந்தால் போதும். வித்தியாசமான இந்த ஊத்தப்பம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்! எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். உங்க வீட்டிலிருக்கும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்க்குமே இந்த காளான் ஊத்தாப்பம் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். சாதாரண தோசையை விட இது போல காளான் சேர்த்து ஊத்தாப்பம் செய்து கொடுத்தால் வயிறு நிரம்பும், ஆரோக்கியமும் கூட. உங்கள் நாளை ஒரு சத்தான உணவுடன் தொடங்க விரும்பினால் நிறைய காளான் மற்றும் குறைந்த எண்ணெயுடன் மொறுமொறுப்பான ஊத்தப்பம் செய்து கொடுங்கள்.

இதனையும் படியுங்கள் : ருசியான கடாய் காளான், காலையில் டிபனில் இருந்து நைட் டின்னர் வரைக்கும் சைட் டிஷ்க்கு வேற எதுவுமே வேண்டாம்!

Recipes AMP · Quick view
View full